மேலும் அறிய

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !

திருட்டு சம்பவத்தில் போலீசாரில்  தீவிர விசாரணையில்  ஆறு மணி நேரத்திற்குள்ளாக வழிப்பறியில் இரு இளைஞர்களை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்  கைது செய்தனர்

மதுரை சோழவந்தான் அருகே டூவீலரில் வந்து பட்டா  கத்தி முனையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறித்த மூன்று இளைஞர்கள் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கொடூர ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பணம் பறித்துச் சென்ற சம்பவம்
 
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கொடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட தனியார் பெட்ரோல் பங்கில், கொடூர ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பணம் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள்  திடீரென பெட்ரோல் பங்கிற்குள்  நுழைந்து கைகளில் பெரிய கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை ஏந்தியவாறு, பணியில் இருந்த ஊழியர் திருமுருகனை கடுமையாக மிரட்டி  பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
 
இருவர் பிடிபட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாகினார்
 
இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தப் பயங்கரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, தப்பியோடிய  இளைஞர்களைத் சமயநல்லூர் காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் உத்தரவின்பேரில் சார்பு ஆய்வாளர் உத்தராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சோழவந்தான் அருகே குருவித்துறை மலை பகுதியில் குற்றவாளிகள் சுற்றித்திரிந்தது போலீசாருக்கு தெரியவந்தது இதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை சுற்றி வளைக்க முற்பட்டபோது இருவர் பிடிபட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாகினார்.
 
பணம் மற்றும் பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணை
 
இப்படிப்பட்ட இளைஞர்களிடம்  பணம் மற்றும் பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணை  நடத்தியதில் சோழவந்தான் அருகே முள்ளிப்புள்ளம் கிராமத்தை சேர்ந்த முத்து இளங்கோவன்(22) மற்றும் சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்த மகாலிங்கம் (21) இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது மேலும் தலைமறைவான இளைஞரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இரவு 10 மணிக்கு நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தில் போலீசாரில்  தீவிர விசாரணையில்  ஆறு மணி நேரத்திற்குள்ளாக வழிப்பறியில் இரு இளைஞர்களை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்  கைது செய்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்; வாணியம்பாடியில் கடத்தப்பட்ட மாணவன் பெங்களூரில் மீட்பு - நடந்தது என்ன?
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்; வாணியம்பாடியில் கடத்தப்பட்ட மாணவன் பெங்களூரில் மீட்பு - நடந்தது என்ன?
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
Iran Vs America: அந்த பயம் இருக்கட்டும்.! ஏவுகணை சோதனை செய்த ஈரான்; தெறித்து ஓடிய அமெரிக்க போர்க்கப்பல்கள்.!
அந்த பயம் இருக்கட்டும்.! ஏவுகணை சோதனை செய்த ஈரான்; தெறித்து ஓடிய அமெரிக்க போர்க்கப்பல்கள்.!
Embed widget