மேலும் அறிய
Advertisement
Special Trains: பயணிகளே! மதுரை கோட்டத்தில் 28 சிறப்பு ரயில்கள் - எங்கு போகுது தெரியுமா?
பயணிகள் வசதிக்காகவும், விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்கவும் மதுரை கோட்டத்தில் 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தென் தமிழகத்தில் தலைநகரமாக மதுரை திகழ்கிறது. மதுரை வழியாகவே தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுகிறது. மதுரை கோட்டத்தில் 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தகவலை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதன் தகவல்கள் இங்கே.
சிறப்பு ரயில்கள்:
”ஏப்ரல் 8 முதல் ஜூன் 24 வரை தெலுங்கானா கச்சக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயிலும் (07191) ஏப்ரல் 10 முதல் ஜூன் 26 வரை மதுரை - கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயிலும் (07192), மே 6 முதல் ஜூன் 24 வரை குஜராத் ஓஹா - மதுரை வாராந்திர சிறப்பு ரயிலும் (09520), மே 19 ஜூன் 28 வரை மதுரை - ஓஹா வாராந்திர சிறப்பு ரயிலும் (09519),
வாராந்திர ரயில்கள்:
ஏப்ரல் 7 முதல் மே 26 வரை திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலும் (06030), ஏப்ரல் 8 முதல் மே 27 வரை மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயிலும் (06029), ஏப்ரல் 11 முதல் மே 30 வரை மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர ரயிலும் (06070), ஏப்ரல் 12 முதல் மே 31 வரை தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர ரயிலும் (06069), ஏப்ரல் 6 முதல் ஜூன் 29 வரை ஹூப்பாளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயிலும் (07355),
ஏப்ரல் ஏழு முதல் ஜூன் 30 வரை ஹூப்பாளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயிலும் (07356), ஏப்ரல் 1 முதல் மே 27 வரை மைசூர் - மானாமதுரை ரயிலும் (06237), ஏப்ரல் 2 முதல் மே 28 வரை மானாமதுரை - மைசூர் வாராந்திர ரயிலும் (06238), ஏப்ரல் 5 முதல் ஜூன் 28 வரை கச்சக்குடா - நாகர்கோவில் வாராந்திர ரயிலும் (07435), ஏப்ரல் ஏழு முதல் ஜூன் 30 வரை நாகர்கோவில் கச்சக்குடா வாராந்திர ரயிலும் (07436), மே 5 முதல் மே 26 வரை நாகர்கோவில் தாம்பரம் வாராந்திர ரயிலும் (06012), மே 6 முதல் மே 27 வரை தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர ரயிலும் (06011)
வந்தே பாரத் மற்றும் வாரந்திர ரயில்:
மே 2 முதல் ஜூன் 27 வரை சென்னை - நாகர்கோவில் வாராந்திர வந்தே பாரத் ரயிலும் (06067), நாகர்கோவில் - சென்னை வாராந்திர வந்தே பாரத் ரயிலும் (06068), மே 3 முதல் ஜூன் 30 வரை சென்னை - நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை வந்தே பாரத் ரயிலும் (06057), நாகர்கோவில் - சென்னை வாரம் மும்முறை சேவை வந்தே பாரத் ரயிலும் (06058), ஜூன் 27 வரை செகந்திராபாத் ராமநாதபுரம் வாராந்திர ரயிலும் (07695), ஜூன் 28 வரை ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர ரயிலும் (07696) இயக்கப்பட்டு வருகின்றன.
கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள்
மத்திய பிரதேசம் ஜபல்பூர் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (02122) ஏப்ரல் 18 முதல் ஜூலை 26 வரையும், மதுரை - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (02121) ஏப்ரல் 20 முதல் ஜூலை 27 வரையும், திருநெல்வேலி - பெங்களூர் எலகங்கா வாராந்திர சிறப்பு ரயில் (06045) மே 22 முதல் ஜூன் 12 வரையும், எலகங்கா - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06046) மே 23 முதல் ஜூன் 13 வரையும், ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக தாம்பரம் - கொச்சுவேலி வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் (06035) மே 16 முதல் ஜூன் 29 வரையும், கொச்சுவேலி - தாம்பரம் வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் (06036) மே 17 முதல் ஜூன் 30 வரையும் இயக்கப்பட்டு வருகின்றன” எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Tiruvannamalai: கோடை விடுமுறை ட்ரிப் பிளான் திருவண்ணாமலைக்கு போடலாம்... இதைப்பாருங்க
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion