(Source: ECI/ABP News/ABP Majha)
மதுரை கோட்டத்தில் 23 ரயில்வே கேட்கள் மின்சார ஆற்றல் செயல்பாட்டிற்கு மாற்றம்
நிதியாண்டில் மேலும் 100 ரயில்வே கேட்டுகள் மின்சார ஆற்றல் செயல்பாட்டிற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
ரயில்வே கேட்கள்
ரயில் பாதையும் சாலையும் சந்திக்கும் இடங்களில் விபத்துக்களை தவிர்க்க ரயில்வே கேட்டுகள் அமைக்கப்படுகின்றன. அந்த ரயில்வே கேட்டுகள் பழைய காலத்தில் கதவு போன்ற அமைப்புகள் இருந்தன. இருபுறமும் அவற்றை திறப்பதற்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இது தவிர்ப்பதற்காக சாலையில் ரயில் பாதை இரு புறமும் ஒரே நேரத்தில் ஏறி இறங்கும் வகையில் நீண்ட இரும்பு பைப்புகள் கொண்ட கேட்டுகள் அமைக்கப்பட்டன. இவற்றை ரயில்வே ஊழியர் மனித ஆற்றல் மூலம் தன் அருகில் உள்ள சக்கரம் போன்ற அமைப்பை சுழற்றி கேட்டுகளை மூடவும் திறக்கவும் செய்வார். மனித ஆற்றலால் செயல்படுவதால் கால தாமதம் ஏற்பட்டு இரு புறமும் உள்ள சாலை வாகனங்கள் ரயில் பாதையை கடப்பது சிரமமாக இருந்து வருகிறது.
மின் ஆற்றல் மூலம் ரயில்வே கேட்
இதை தவிர்க்க மதுரை கோட்டத்தில் 23 கேட்டுகள் மின்சார ஆற்றலால் இயங்கும்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 நொடிகளில் கேட்டுகளை திறக்கவும், மூடவும் முடியும். ரயில்வே ஊழியர் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் ரயில்வே கேட் இரும்பு பைப்புகளை எளிதாக ஏற்றி இறக்கி சாலைப்போக்குவரத்தை நிறுத்தவும், அனுமதிக்கவும் முடியும். இதனால் ரயில் கடந்த பிறகு சாலை வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. விபத்துக்கள் இல்லாமலும் ரயில்களை வேகமாக இயக்க முடியும். மின்சார ஆற்றல் மூலம் இயக்கப்படும் இந்த கேட்டுகள் ரூபாய் 20 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. சாலை வாகன ஓட்டுனர்கள் கவனக்குறைவாக வேகமாக வந்து ரயில்வே கேட்டுகளில் மோதி சேதம் ஏற்படுத்துவது உண்டு.
- கீழடி அகழாய்வில் உடைந்த நிலையில் செம்பு பொருள் கண்டெடுப்பு.. என்ன தெரியுமா?
100 ரயில்வே கேட்டுகள் மின்சார ஆற்றல்
தற்போது அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார ஆற்றல் ரயில்வே கேட்டுகள் சேதமடைந்தால், கவனக்குறைவாக செயல்பட்ட வாகன ஓட்டுனர்களிடம் இருந்து ரூபாய் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை பழுதுபார்ப்பு செலவு வசூலிக்கப்படும். எனவே சாலை வாகன ஓட்டுனர்கள் ரயில்வே கேட்டு அடைத்திருக்கும் போது உரிய இடைவெளியில் வாகனங்களை நிறுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நிதியாண்டில் மேலும் 100 ரயில்வே கேட்டுகள் மின்சார ஆற்றல் செயல்பாட்டிற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிடுமா? - கரு.நாகராஜன் சவால்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Zoya : ஜோயா மிஸ்ஸிங்! கடந்த வாரம் நிகழ்ச்சியில் பங்கேற்காததால் வந்த சந்தேகம்... தானாக வெளியேற்றிவிட்டாரா?