2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிடுமா? - கரு.நாகராஜன் சவால்
கூட்டணிக் கட்சிகளின் பலத்தினால் தான் திமுக ஆட்சியில் இருக்கின்றது, 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிடுமா? என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் சவால் விடுத்துள்ளார்.
தேனியில் பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், பாஜகவின் தேர்தல் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன் கூறும் போது, தேனியில் டிடிவி தினகரன் தோல்வி என்று கூற மாட்டோம் இதுவே ஒரு வெற்றி தான் . 27 சதவீதம் வாக்குகள் பெற்ற எங்கள் கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரன் தோல்வி பெற்றதாக கருத மாட்டோம். மக்கள் பாஜக கூட்டணி பக்கம் திரும்பி உள்ளார்கள் என்பதற்கு இந்த தேர்தலில் நாங்கள் பெற்ற வாக்கு சதவீதம் ஒரு எடுத்துக்காட்டு. 2026 சட்டமன்ற தேர்தலில் மிக பெரிய வெற்றி பெறுவோம் கூட்டணி ஆட்சி அமையும், ஆளும்கட்சி மீது குறை சொல்லுகிற அதிமுக ஈரோடு இடைத்தேர்தலில் மட்டும் எதற்கு போட்டியிட்டர்கள் ?
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
ஒட்டுமொத்த மக்கள் திமுகவுக்கு எதிராக உள்ளார்கள். இன்றைக்கு கூட கள்ளச்சாராயம் பிடிபட்டுள்ளது. அதிகாரிகள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்கள், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கப்படுகிறது. பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களுக்கு ஏன் பாரபட்சம் காட்டுகிறது பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் ,கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் சோதனையான வேதனையான ஆட்சி தான் நடக்கிறது. தினசரி தமிழகத்தில் 4 கொலைகள் நடக்கிறது. எல்லா துறைகளும் போராட்டம் நடத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளின் பலத்தினால் தான் திமுக அரசு ஆட்சியில் இருந்து வருகிறது, கூட்டணி இல்லாமல் 2026 தேர்தலில் திமுக அரசால் போட்டியிட முடியுமா? ” என்று சவால் விடுத்து பேசினார்.