மேலும் அறிய

மாறும் தென்மாவட்ட ரயில்நிலையங்கள்.. இதில் மதுரைக்கு மட்டும் ரூ.347 கோடி, ஆஹா அசத்தல் அப்டேட் !

மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 347.47 கோடி செலவில் மறு சீரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை கோட்ட ரயில் நிலைய வளர்ச்சி பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் இன்று ஆய்வு செய்தார்.

ரயில் வேக சோதனை ஓட்டமும் நடைபெற இருக்கிறது. 
 
மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே  பொது மேலாளர் ஆர். என். சிங் செய்தார். திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் போன்ற ரயில் நிலையங்களில் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் புதன்கிழமை அன்று ஆய்வு செய்கிறார். பின்பு திருநெல்வேலி - திருச்சி இடையே சிறப்பு ஆய்வு ரயில் மூலம் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வில்  கட்டுமான பிரிவு முதன்மை நிர்வாக அதிகாரி சுசில் குமார் மவுரியா, முதன்மை பொறியாளர் சஞ்சய் பிரசாத் சிங், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இறுதியாக திருநெல்வேலி ரயில் நிலைய ஆறாவது நடைமேடை மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்வார். பிறகு திருநெல்வேலியில் இருந்து திருச்சி வரை ஆய்வும், ரயில் வேக சோதனை ஓட்டமும் நடைபெற இருக்கிறது. 
 
திருநெல்வேலி: 
 
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரூபாய் 92.8 கோடி செலவில் மறு சீரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கிழக்கு மேற்கு பகுதி ரயில் முனைய கட்டிடங்கள், 12 மீட்டர் அகல ரயில் பாதை மேற்புறப் பகுதி பயணிகள் காத்திருப்பு வளாகம், எஸ்கலேட்டர்கள், லிஃப்ட்கள், மேம்பால நடைப்படிகள்,  வெளி வளாக மேம்பாடு, நடைமேடை மேம்பாடு ஆகிய பணிகள் அடங்கும். திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில்களை தாமதமின்றி இயக்க கூடுதலாக ஆறாவது நடைமேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 60% பணிகள் நிறைவு பெற்று அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. 
 
விருதுநகர்:
 
விருதுநகர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூபாய் 30.55 கோடி செலவில் மறு சீரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தோரண நுழைவுவாயில், சுற்றுச்சுவர், வெளிவளாக மேம்பாடு, மேற்கூறையுடன் கூடிய நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகன காப்பகங்கள், ரயில் நிலைய கட்டட முகப்பு மேம்பாடு, ரயில் இயக்க துணை சேவை அலுவலகங்கள் இடமாற்றம், ஒருங்கிணைந்த விசாரணை மையம் அமைக்கும் பணி ஆகியவை அடங்கும். மேலும் பயணிகள் காத்திருப்பு பகுதி மேம்பாடு, மின் தூக்கி வசதியுடன் கூடிய ஆறு மீட்டர் அகல நடை மேம்பாலப் பணிகள்,  மேற்கூரை நீட்டிப்புப் பணிகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் 94 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதியில் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.
 
மதுரை:
 
மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 347.47 கோடி செலவில் மறு சீரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கிழக்கு மேற்கு பகுதி ரயில் முனைய கட்டடங்கள், 42 மீட்டர் அகல ரயில் பாதை மேற்புறப் பகுதி பயணிகள் காத்திருப்பு வளாகம், நடை மேம்பால மேம்பாட்டு பணிகள், பார்சல் போக்குவரத்திற்கு புதிய தனி நடை மேம்பாலம் அமைப்பது, புதிய விசாலமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன காப்பகங்கள், மேற்கூறையுடன் கூடிய பாதசாரிகள் நடைபாதை, ரயில் நிலையத்தை பெரியார் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் சுரங்கப்பாதை பணிகளும் அடங்கும். ஏற்கனவே கிழக்கு நுழைவாயிலில் புதிய பல்லடுக்கு இருசக்கர வாகன காப்பகமும், மேற்கு நுழைவாயிலில் புதிய பல்லடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகமும் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் கிழக்கு நுழைவாயிலின் வடக்கு பகுதியில் ஒரு புதிய பல்லடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறைவு பெற்று பயணிகள் பயன்பாட்டிற்கு வரும்.
 
திண்டுக்கல்:
 
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூபாய் 22.71 கோடி செலவில் மறு சீரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதிய ரயில் நிலைய கட்டிடம், பயணி சீட்டு பதிவு மையங்கள், ரயில் நிலைய கட்டிட முகப்பு மேம்பாடு, மேற்கூரை பணிகள் ஆகியவை அடங்கும். 
மேலும் தோரண நுழைவுவாயில்,  வெளிவளாக மேம்பாடு, மேற்கூறையுடன் கூடிய நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகன காப்பகங்கள், ரயில் நிலைய கட்டிட முகப்பு மேம்பாடு,  ஒருங்கிணைந்த விசாரணை மையம் அமைக்கும் பணி ஆகியவை அடங்கும். மேலும் பயணிகள் காத்திருப்பு பகுதி மேம்பாடு, மின் தூக்கி வசதியுடன் கூடிய ஆறு மீட்டர் அகல நடை மேம்பாலப் பணிகள்,  மேற்கூரை நீட்டிப்புப் பணிகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய வசதிகள் அடுத்த ஆண்டு மே மாதம் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.

தலைப்பு செய்திகள்

ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
மதுரையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு சீல்: வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர்!
மதுரையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு சீல்: வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர்!
மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
Embed widget