மேலும் அறிய
Advertisement
தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்...!
’’மோடியும், நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும் வரை பெட் ரோல், டீசல் விலை குறையவே குறையாது காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் பேச்சு’’
1. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 23 வயது கட்டிட தொழிலாளி கைது
2. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே திருடிய மாட்டை ஆன்லைன் மூலம் விற்க முயன்ற கும்பலிடம் இருந்து கன்றுக்குட்டிகளுடன் 3 கூடிய மாடு மீட்பு
3. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நேதாஜி விவேகானந்த சேவா சங்கம் என்ற அமைப்பினர் கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்து பரமரிப்பு செய்து வரும் நிலையில் இந்தாண்டு இறுத்திக்குள் மேலும் 8 ஆயிரம் பனை மர விதைகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4. ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் வட்டாரம் வல்லம் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுவிற் கான திருந்திய நெல்சாகு படி இயந்திர நடவு நடைபெற்று வருகிறது.
5. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் உள்ள ஒரு சில உணவகங்களில் தரமற்ற முறையில் உணவை தயாரித்து விற்பதாக பொதுமக்கள் புகார் ; உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த கோரிக்கை
6. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவியில் குவிந்தனர். இதனால் பழனியில் அதிக கூட்ட நெரிசல்
7. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்கள் , தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் என பெய்து வரும் கனமழை எதிரொலியால் மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டங்கள் உயரத் தொடங்கி உள்ளது.
8. மோடியும், நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும் வரை பெட் ரோல், டீசல் விலை குறையவே குறையாது காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் பேச்சு
9. தேனி மாவட்டம் சின்னமனுார் ஆதரவற்றோர் காப்பக உரிமையாளரிடம் 3.50 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த வழக்கில் நைஜீரியாவின் லாகோஸ் தீவை சேர்ந்த ஒலட்டியன் மேத்யூவை தேனி சைபர் க்ரைம் போலீசார் மும்பையில் கைது செய்துள்ளனர்.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 18 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74979-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க - பழுப்புக் கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி.. மதுரையில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்ச்சி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion