மேலும் அறிய

Sivagangai : காளையார்கோவிலில் பானை குறியீடுகள், கீறல்கள், எலும்பாலான முனைக்கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளன

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் பானை குறியீடுகள், கீறல்கள், எலும்பாலான முனைக்கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் பானை குறியீடுகள்  கண்டெடுப்பு. 

பாண்டியன் கோட்டை

சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன்,செயலர் இரா.நரசிம்மன்,கள ஆய்வாளர் கா.சரவணன், உறுப்பினர் சு.காளீஸ்வரன் ஆகியோர் காளையார் கோயில் பாண்டியன் கோட்டை பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில்  ஈடுபட்டதில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து காளிராசா தெரிவித்ததாவது,"திருக்கானப்பேர் என்னும் காளையார்கோவிலில் சங்க கால கோட்டை, பாண்டியன் கோட்டை என்று வழங்கப்படுகிறது. இக்கோட்டையைச் சுற்றி அகழியுடனும் நடுவில் நீராவி குளத்துடனும் மண் மேடாக 37 ஏக்கரில் இன்றும் காட்சி தருகிறது. கானப்பேர் பாண்டியன் கோட்டை பற்றிய செய்தி புறநானூற்றில் 21வது பாடலில் இடம்பெற்றுள்ளது.

இப்பகுதியை குறுநில மன்னனான வேங்கை மார்பன் ஆட்சி செய்ததும் அவனது கோட்டையை பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி பெற்றதும் அக்கோட்டையின் சிறப்புகளும் பாடலில் இடம் பெறுகின்றன. இலக்கியத்தின் சான்றாக இன்றும் இக்கோட்டை காணப்படுகிறது. மேட்டுப்பகுதி முழுதும்  பானை ஓடுகள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.

பானை ஓட்டுக்கீறல்

சிவகங்கை தொல்நடைக் குழு அவ்வப்போது இக்கோட்டைப் பகுதியில்  மேற்பரப்புகள ஆய்வு செய்து வருகிறது.
அதில் தொடர்ச்சியாக பழமையான பொருட்கள் கிடைத்து வருகின்றன. வட்டச் சில்லுகள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சங்க கால செங்கல் எச்சங்கள் தொடர்ச்சியாக கிடைத்துள்ளன. மேலும் பானை ஓட்டுக்கிறல்கள், குறியீடுகள் கிடைத்ததோடு 2000 ஆண்டுகளுக்கு பழமையான தமிழி எழுத்தில் மோசிதபன் என்று எழுதப்பட்ட பானை ஓடும் முன்பு கிடைத்தது, நெசவுக்கு அல்லது வேறொரு காரணத்திற்காக பயன்படுத்தப்பட்ட எலும்பாலான முனையுடைய கருவி ஒன்றும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது‌.

பானை ஓட்டு குறியீடுகள்

சிவகங்கை தொல்நடைக் குழுவினர் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில்  தற்பொழுதும் பானை குறியீடுகள் கீறல்கள் கிடைத்துள்ளன. பானை ஒட்டு குறியீடுகள் கீறல்கள் தங்களது பொருட்களை அடையாளப்படுத்தும் விதமாகவோ அல்லது வேறு செய்தியை தெரிவிப்பதற்காகவோ பொறிக்கப்பட்டு இருக்கலாம்.
மேலும் இவை எழுத்தறிவுக்கு முன்பிருந்தும் எழுத்தறிவு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகின்றன. இன்றும் நம்மிடையே குறியீடுகள் பொறிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. முக்கோண வடிவிலான குறியீடு, சதுர வடிவிலான குறியீடு சிதைவுற்ற வடிவில் கிடைத்துள்ளன, க ண போன்ற தமிழி எழுத்து வடிவமுடையது போன்ற பானையோடு கிடைத்து இருந்தாலும் தொல்லியல் அறிஞர்களின் மேலாய்வில் அது குறியீடாகவே கருதப்படுகிறது.

எலும்பாலான கருவி முனை.

சங்க காலத்திலேயே நமது முன்னோர்கள் நெசவு உள்ளிட்ட தொழில்களுக்கு நுட்பமான பல கருவிகளையும் பயன்படுத்தி உள்ளனர். தற்போது கிடைத்து இருக்கக்கூடிய எழும்பாலான கருவி முனையின் முனைப்பகுதி சற்று சேதமடைந்துள்ளது. இதே போன்ற எலும்பாலான கருவி முனை முன்பும் இங்கே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடத்தில் அகழாய்வு செய்ய, தொல்லியல் துறை அமைச்சர் அவர்களிடம் விண்ணப்பம் வழங்கியதின் வழி தொல்லியல் துறை கள மேலாய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என்ற தகவல், சிவகங்கை தொல் நடைக் குழுவினருக்கு தெரிவித்துள்ளனர். இவ்விடத்தின் பழமையை அறிந்து கொள்ளவும் பாதுகாக்கவும் தொல்லியல் துறை அடுத்து வரும் ஆண்டுகளில் அகழாய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

- Madurai: ”படிக்கட்டுல நிக்காதீங்க கண்ணுங்களா” - மாணவிகளை பத்திரமாக அனுப்பும் மூதாட்டி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget