சிவகங்கை மருத்துவப் பணியில் வாய்ப்பு! 2025-க்குள் விண்ணப்பியுங்கள்: காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் 15.12.2025 முதல் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்
1. செவித்திறன் ஆய்வாளர் (Audiologist ) / பேச்சு சிகிச்சையாளர்:
காலிப்பணியிடம் - 1,
கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், பல்கலைகழகங்களில் கேள்வித்திறன் மற்றும் பேச்சு மொழி நோயியல் இளங்கலை பட்டம்.
2. அறுவை அரங்கு உதவியாளர் (OT Assistant):
காலிப்பணியிடம் – 1,
கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், பல்கலைகழகங்களில் மூன்று மாத அறுவை அரங்கு தொழில்நுட்பவியலாளர் படிப்பு.
விண்ணப்பம் செய்வது எப்படி
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.in வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சிவகங்கை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், நேரு பஜார் சாலை, சிவகங்கை 630561 என்ற முகவரியில் 30.12.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















