மேலும் அறிய
சிவகங்கை அருகே கல்குவாரியில் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழந்த சோகம்
நிலச்சரிவில் சிக்கிய 6 பேரில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 4 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றொரு தொழிலாளரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கல்குவாரி
Source : whats app
மல்லாகோட்டையில் செயல்படும் கல்குவாரி
சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ். கோட்டை அருகே மல்லாக்கோட்டை பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் தொடர்து பாறையை உடைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. கடந்த சில நாட்களாக மதுரை, சிவகங்கை பகுதியில் கனமழை பெய்துவரும் சூழலில் குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர், இந்த சம்பவம் இப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 6 பேரில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 4 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றொரு தொழிலாளரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் பலத்த காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் ஆய்வு
தகவல் அறிந்தவுடன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்..,” மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிவித்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உடன் இருந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜித் மற்றும் ஓடைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், கணேஷ், ஆறுமுகம் மற்றும் ஆண்டிச்சாமி ஆகியோர்உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் குவாரி பகுதியில் இறந்தவர்களை பார்வையிட உறவினர்களை அனுமதிக்கவில்லை
இதையடுத்து, போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான நிலை ஏற்பட்டது. கடைசியாக ஒரு நபர் மட்டும் சிக்கியுள்ள சூழலில் அவரை மீட்க நெல்லையில் இருந்து நவீன இயந்திரங்கள் வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
சட்ட நடவடிக்கை தேவை
இது குறித்து சமூக ஆர்வலர் பா.ஸ்டாலின் கூறுகையில்..,” மல்லாகோட்டையில் செயல்படும் மேகா புளூ மெட்டல்ஸ் நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் உள்ளது. சட்டத்திற்கு புறம்பாக அதிகளவும் நிலத்தை தோண்டி குவாரியில் கல், மண் உள்ளிட்ட பல்வேறு இயற்கை வளங்களை எடுத்துவருகின்றனர். பொதுமக்கள் தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாடு பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த சூழலில் இந்த குவாரி தற்போது 5 உயிர்களை வாங்கியுள்ளது. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இல்லாதது வேதனைக்குறியது. எனவே உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டு. உரிமையாளார் மீடு சட்ட நடவடிக்கை தேவை” என கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















