மேலும் அறிய
Advertisement
வலிகளை உடைத்து சிலம்பத்தில் சாதனை; சிவகங்கை சிங்கப்பெண்னுக்கு குவியும் பாராட்டு!
கேலி, கிண்டல், அவமானங்களை உதரிவிட்டு கிராமத்தில் இருந்து வீர் கொண்ட செல்வ பிரியா போன்ற பெண்களை சமூகத்தில் அங்கீகரித்து பாராட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
இறுக்கி செய்யும் அணுகுண்டு சத்தம் அதி பயங்கரமாக இருக்கும். அதைப்போல் வறுமையெனும் இறுக்கத்தில் இருந்து வெளியே வந்த இளம்பெண்னின் வெற்றி ஊரையே கொண்டாட வைத்துள்ளது. "ஆட்டோக்காரர் மகளுக்கு இதெல்லாம் தேவையா...? ஆம்பள புள்ள மாதிரி சுத்திக்கிட்டு திரியுது, இதெல்லாம் எங்க உறுப்பட போகுது.." என்று ஏளனமாக பேசிய வாய்கள் எல்லாம் இப்ப வாழ்த்துது என்று பெருமை கொள்கிறார் செல்வ பிரியா.
தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டமாக பார்க்கப்படும் சிவகங்கை மாவட்டத்தில் கடைக்கோடி கிராமங்களில் ஒன்று தான் மழவராயனேந்தல். திருப்பாச்சேத்தி அருகே உள்ள இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தான் 21 வயதான இளம் பெண் செல்வ பிரியா. ஒடுக்கப்படும் போது தான் உயர பறக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை கொண்டவராக இருக்கும் செல்வ பிரியா சிறுவயதில் இருந்தே சாதனை படைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஓவிய போட்டி, தடகள போட்டி, படிப்பு என எல்லாவற்றிலும் திறமையை மெறுகேற்றிக் கொண்ட இவர் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திலும் பயிற்சி பெற்று அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கும் வகையில் கோலோச்சி இருக்கிறார்.
பி.எஸ்.சி., பட்டப்படிப்பு முடித்த இவர் குமார் என்ற சிலம்ப மாஸ்டரிடம் பயிற்சி மேற்கொண்டு தினமும் அதனை பரிசோதித்து சிலம்பத்தை முறையாக கற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலக சாதனைப் போட்டியில் தொடர்ந்து 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார். அப்பாவிற்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஒரு பகுதியில் தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார். பேராசியைகள் ஜெபா, சுகன்யா உள்ளிட்ட தோழமைகளும் இவருக்கு ஊக்கத்தை கொடுத்ததாக பெருமை கொள்கிறார்.
தொடர்ந்து செல்வபிரியா தனது கிராமத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார். கிராம பெண்கள் வாழ்கையில் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என முன் உதாரணமாக வெற்றி பெற்று விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறார். சிவகங்கையில் என்னைப் போல் சாதிக்க பல்வேறு சிங்கப்பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும், வாய்ப்பையும் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து செல்வ பிரியா நம்மிடம்...," சிலம்பத்தில் உலக சாதனை எளிதில் செய்துவிடவில்லை. ஒரு கிராமத்து பின்னனியில் இருந்து செய்யும் ஒவ்வொரு நகர்வும் கடினமாக இருந்தது. சிலம்பத்திற்கு அணிந்து கொள்ளும் உடையில் இருந்து, பயிற்சியில் எடுத்துக் கொள்ளும் நேரம் கூட சவாலாக இருக்கும். அப்பா தினமும் கொடுக்கும் 10 ரூபாயை சேமித்து வைத்து தான் சின்ன விசயங்களை பூர்த்தி செய்துகொண்டேன். என்னுடன் மாஸ்டரும், ஜெபாக்கா, சுபாக்கா போன்றவர்களின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானது. அவர்கள் ஊக்கத்தால் தான் என்னால் சாதனை செய்ய முடிந்தது. அப்பாவும், அம்மாவும் என்ன நினைச்சு பயப்பிடுவாங்க ஆனா தப்பான வழிக்கு போகமாட்டேனு என்னை முழுசா நம்புனாங்க. காலையில 6 மணிக்கு முன்னாடியே பயிற்சிக்கு போயிருவேன், வீடு திரும்ப இருட்டுபட்டிரும் ஆனாலும் என் பயிற்சியில் இருந்து சிறிதும் பின் வாங்கல. தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டேன்.
சின்ன வயசில இருந்தே சாதனை செய்ய வேண்டும் என்பது என் குறிக்கோள். அதன்படி தான் சிலம்பத்தில் உலக சாதனை செஞ்சுருக்கேன். சிலம்பம் தொடர்ந்து சுத்துவது சவால ஒன்னு தொடர் பயிற்சியில் இருக்கவங்க மட்டும் தான் தொடர்ந்து சுத்தமுடியும். அப்படி சிரத்தை எடுத்து பயிற்சி செய்து தான் உலக சாதனை படைச்சேன். பெண்கள் எல்லோரும் ஒவ்வொரு துறையிலையும் சாதிக்கனும்னு நினைக்கிறேன். என்னுடைய கிராமத்தின் வளர்ச்சியை நினைச்சு தான் எல்லாருக்கும் இலவசமா சிலம்பம் சொல்லிக் கொடுக்கிறேன். தொடர்ந்து என்னால் முடிந்த சாதனையை செய்வேன்" என்றார் நம்பிக்கையாக.
கேலி, கிண்டல், அவமானங்களை உதரிவிட்டு கிராமத்தில் இருந்து வீர் கொண்ட செல்வ பிரியா போன்ற பெண்களை சமூகத்தில் அங்கீகரித்து பாரட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion