மேலும் அறிய

சிவகங்கை: RRB Group-D இலவச பயிற்சி வகுப்புகள்.. 2026-ல் அரசு வேலை உறுதி? உடனே விண்ணப்பிங்க!

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தன்னார்வப் பயிலும் வட்ட நுாலகத்தில் பராமரிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்டம்  இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் RRB Group-D பதவிகளுக்கான தேர்விற்கு, வருகின்ற 23.2.2026 முதல் இலவச பயிற்சி வகுப்புகள்  சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  நடைபெறவுள்ளது. -  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். 

இலவசப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது

மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டம் வாயிலாக தொடர்ந்து இலவசப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 500-ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட TNPSC-Group IV தேர்வு முடிவில் இத்தன்னார்வப் பயிலும் வட்டத்தில் பயின்ற 9 மாணவர்கள் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவியில் பணி நியமனம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற TNPSC-Group II&IIA தேர்வில் 3 மாணவர்கள் உதவியாளர் பதவியில் தேர்ச்சி பெற்று, பல்வேறு துறைகளில் அரசுப் பணியில் உள்ளனர்.

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்

தற்போது, இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) Group-D பதவிகளில், 22,195 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது I.T.I தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 01.01.2026 அன்று 18 வயது நிறைவு பெற்றிருத்தல் வேண்டும்.  -2-  RRB Group-D பதவிகளுக்கான தேர்விற்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள முகவரியின் வாயிலாக வருகின்ற மார்ச் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும். குறிப்பிட்டுள்ள தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 23.2.2026 முதல் வார நாட்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 வரை நடத்தப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சி வகுப்புகளில் அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. RRB Group-D பதவிகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்ப விருப்பும் மாணாக்கர்கள் தங்களது புகைப்படம் மற்றும் சுய விவரங்களுடன் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர்கள், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தன்னார்வப் பயிலும் வட்ட நுாலகத்தில் பராமரிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், www.tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர்கற்றல் இணையதளத்தில் அனைத்துப் போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்மெய்நிகர் கற்றல் இணையதளத்தைப் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget