மேலும் அறிய
சிவகங்கை கல்லூரிகளில் சிறுதானிய உணவகம்.. நீங்களும் நடத்தலாம் விண்ணப்பிக்க கடைசி தேதி !
சிறுதாணிய சிற்றுண்டி உணவகம் நடத்திட குறிப்பிட்ட தகுதியின் அடிப்படையில் சுய உதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறுதானிய உணவு
Source : whats app
சிவகங்கை மாவட்டம் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
சுய உதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டில் கல்லூரியில் சுய உதவிக்குழுக்கள் மூலமாக சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மற்றும் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி ஆகியவைகளில் சிறுதாணிய சிற்றுண்டி அமைக்கப்படவுள்ளது. எனவே, சிறுதாணிய சிற்றுண்டி உணவகம் நடத்திட குறிப்பிட்ட தகுதியின் அடிப்படையில் சுய உதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறுதானிய உணவகம் அமைத்து அனுபவம் பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
அவ்வாறாக, மேற்கண்ட கல்லூரிகளில் தனித்தனியாக சிறுதாணிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கென, சம்பந்தப்பட்ட கல்லூரிகளிலிருந்து 5 கிலோ மீட்டர் முதல் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள், தொகுப்புகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், SHG/PLF/Cluster–தரமதிப்பீட்டி ல் A or B தரம்பெற்றவராகவும், சிறுதானிய உணவகம் அமைத்து அனுபவம் பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பத்தினை நேரில் வழங்கிட வேண்டும்
மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள், தொகுப்புகளிடமிருந்து குறைந்தபட்சம் 6 முதல் 8 நபர்கள் சிறுதானிய உணவகம் நடத்த தன்னார்வத் தொண்டு செய்ய தயாராக இருந்தல் வேண்டும். உணவு தொடர்பான நிறுவனங்களை உருவாக்குவதில் அல்லது நடத்துவதில் குழு, கூட்டமைப்பு, தொகுப்பு முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதியின் அடிப்படையில், சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைத்திட தகுதியுள்ள குழுக்கள், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை (ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகை அருகில், சிவகங்கை – 630562) என்ற முகவரிக்கு, வருகின்ற 30.09.2025-ஆம் தேதியன்று மாலை 05.00 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரில் வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















