SIR குளறுபடி: 22,000 வாக்காளர்கள் நீக்கம்! அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு புகார், உடனே ரத்து செய்ய கோரிக்கை!
ஒன்றிய அரசு உடனடியாக SIR ஐ ரத்து செய்ய வேண்டும் என திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி.

SIR பணி முறையாக நடைபெறவில்லை குளறுபடி நடக்கிறது. என்னுடைய தொகுதியில் 22 ஆயிரம் பேர் நீக்கி உள்ளார்கள். இது சம்பந்தமாக நான் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி உள்ளேன். ஒன்றிய அரசு உடனடியாக SIR ஐ ரத்து செய்ய வேண்டும் என திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி.

திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேசுகையில், திருப்பரங்குன்றம் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். விஜய் அரசியல் கட்சியாக இன்னும் அங்கீகாரம் பெறவில்லை. ஒரு அரசியல் கட்சியாக இருந்தால் நிச்சயம் கருத்து கூறுவார்கள். யாரும் கட்சி மாறுவது பற்றி பேசுவதற்கு நான் தயாராக இல்லை. எனக்கு அதுபற்றி தெரியாது. எனக்கு பிறந்ததில் இருந்து எனக்கு தெரியாது நான் ஒரே கட்சியில் தான் இருக்கிறேன். ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் கிட்ட தட்ட ஆப்ஷன்ஸ் ஒரு 6000 பேர், இறந்தவர்கள் என 16 ஆயிரம் பேர் அது நீங்கலாக கிட்ட தட்ட 22 ஆயிரம் பேர் நீக்கி உள்ளார்கள்.
இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்திற்கு நான் புகார் அனுப்பி உள்ளேன். இப்பவும் சொல்றேன் blo வாக்காளர்களை சேர்ப்பதற்கு போகவில்லை. அறையில் அமர்ந்து ஒரே இரவில் நீக்கிவிட்டார்கள். வாக்காளர்கள் கையெழுத்து இட்டு கொடுத்த மனுவை அப்படியே வைத்துக்கொண்டு ஆட்கள் இடம் மாற்றும் செய்து விட்டார்கள் என்று போட்டுவிட்டார்கள். இப்படி ஒரு அதிசயம் ஆத்தூர் தொகுதியில் நீக்கி உள்ளார்கள். உடனே சேர்ப்பதாக சொன்னார்கள் அது நடக்கிறதா நடக்கலையானு எனக்கு தெரியவில்லை. அதுல எனக்கு நம்பிக்கை இல்லை. வாக்காளர்கள் தொகுதியில் இருக்கிறார்களா என்று பார்த்தார்களா? எந்த ஊரில் சென்று பார்த்தார்கள்? SIR குளறுபடி அவுங்க எங்கேயும் போகவில்லை.

ஏதோ கணக்கு காண்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.SIR முழுமையாக சரியாக நடைபெறவில்லை. ஆகவே இந்த SIR ஐ ஒன்றிய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். தேர்தல் நடத்துங்கள் வாக்காளர்கள் வாக்களிக்கட்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது எங்களுடைய அடிப்படை உரிமை. நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்வது என்பது சட்டம் இல்லை. சட்டமே சொல்கிறது உங்கள் உரிமையை பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் செல்லலாம் என்று. அதனால்தான் போயிருக்கோம் என தெரிவித்தார்.





















