மேலும் அறிய

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் உரத் தட்டுப்பாடு - அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் புகார்

’’266 ரூபாய்க்கு விற்க வேண்டிய யூரியா உரங்கள் 500 ரூபாய்க்கும், 1300 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய டிஏபி உரங்கள் 1700 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருவதாக புகார்’’

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, கீழக்கரை, திருவாடனை, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் உள்ளிட்ட தாலுகாக்கள் உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் மானாவாரியாகவும் கண்மாய் நீர்ப்பாசனம் மூலம் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால் விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிர்களில் மழைநீரை போதிய அளவு விவசாயிகள் தேக்கி வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் உரத் தட்டுப்பாடு - அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் புகார்

இந்த நிலையில் நெற்பயிர்களில் தேங்கியுள்ள மழைநீரில் யூரியா உரங்கள் போடப்பட்டால் தான் பயிர்கள் நன்றாக வளர்ந்து நல்ல மகசூல் அடையும் நிலைக்கு வந்தடையும். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உரகடைகளிலும் யூரியா, டிஏபி உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அலைந்து திரிந்து வருகின்றனர். இதையடுத்து ராமநாதபுரம்,  திரூத்திரகோசமங்கை முதுகுளத்தூர், உள்ள தனியார் உரக் கடைகளில் உரங்கள் வாங்குவதற்காக ஏராளமான விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்து உர வாங்குவதற்காக விவசாயிகள் முந்தி அடித்து வருவதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் உரத் தட்டுப்பாடு - அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் புகார்

உரம் வாங்குவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் அதிக அளவில் விவசாயிகள் உரம் வாங்க கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மிகவும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையின் உதவியால் ஓரளவு கூட்ட நெருக்கடி சரிசெய்யப்பட்டது. இருந்தும் அதிக அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஆதார் அட்டைக்கு குறிப்பிட்ட அளவே உரம் கிடைப்பதால் அவர்கள் விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே கூட்டுறவு சங்கங்கள் உடனே உரங்களை தருவித்து விற்பனை செய்தால் மட்டுமே இந்த உரத் தட்டுப்பாடு நீங்க வாய்ப்பு உள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தகுந்த நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் துயரை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு யூரியா உரம் அரசு சார்பில் 266 ரூபாய்க்கும், டிஏபி 1300 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரே சமயத்தில் பெரும்பாலான விவசாயிகள் உரம் வாங்க குவிந்ததால் 266 ரூபாய்க்கு விற்க வேண்டிய யூரியா உரங்கள் 500 ரூபாய்க்கும், 1300 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய டிஏபி உரங்கள் 1700 ரூபாய்க்கும் அதிக விலைக்கு தனியார் உரக்கடைகள் விற்கப்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், கூடுதல் விலைக்கு உரங்களை விற்கும் தனியார் உரக் கடைகளுக்கு வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக, விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் உரத் தட்டுப்பாடு - அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் புகார்

தற்போது கடன் வாங்கி அதிக விலை கொடுத்தாலும் உரம் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவிப்பதோடு, தங்களுடைய பயிர்களுக்கு உரத்தை போட முடியாமல் மிகுந்த மன வேதனை அடைந்து வருகின்றனர் விவசாயிகள். இதற்கு மாவட்ட நிர்வாகம், வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையில் போதுமான உரங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Embed widget