பேரிடரை முன்கூட்டியே அறிந்தும் அமித்ஷா ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - செல்வப்பெருந்தகை
ராகுல் காந்தி அங்கு சென்று வயநாடு பேரிடரை பார்வையிட்டு வரும் நிலையில் அங்கு நடந்த கூட்டத்தில் வீடுகளை இழந்த நபர்களுக்கு வீடு கட்டித் தருவோம் என தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிய வருகிறது,
வயநாடு நிலச்சரிவிலும் பாஜக அரசியல் செய்கிறது. பேரிடரை முன்கூட்டியே அறிந்தும் அமித்ஷா ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. செய்தி மற்றும் தகவல் தெரிவிக்கவில்லை. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என அகில இந்திய காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை தேனியில் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் தேனி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மாற்று கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணையும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.தேனி நகராட்சிக்கு எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் ஸ்ரீவில்லிப் பிரசாத் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா பொதுச் செயலாளர் அமைப்புச் செயலாளர் இளைஞர் அணி தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய செல்வப் பெருந்தகை, “தற்போது மத்தியில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சிக்கு பீகார் மற்றும் ஆந்திரா முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. விரைவில் அது கவழும். ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி அமையும் அதுவே மக்களின் நல்லாட்சியாக இருக்கும் .
பாஜக வயநாடு பேரிடரிலும் அரசியல் செய்கிறது . உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்கூட்டியே வயநாட்டில் பேரிடர் ஏற்படப் போவது என்று அறிந்த விஷயத்தை ஏன் செய்தி மூலமாக எச்சரிக்கை கொடுத்து நாட்டு மக்களை காப்பாற்றவில்லை. பேரிடர் மீட்பு படையினரை முன்கூட்டியே ஏன் அனுப்பி வைக்கவில்லை. இந்த இயற்கை பேரிடர் முன்கூட்டியே அறிந்த அமித்ஷா ஏன் தற்போது உயிரிழந்த 200க்கும் மேற்பட்ட நபர்களை முன்கூட்டியே தகவல் தெரிவித்து காப்பாற்றவில்லை இதற்கு நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் ராகுல் காந்தி அங்கு சென்று பேரிடரை பார்வையிட்டு வரும் நிலையில் அங்கு நடந்த கூட்டத்தில் வீடுகளை இழந்த நபர்களுக்கு வீடு கட்டித் தருவோம் என தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிய வருகிறது, அதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பங்கு இருக்கும் . வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் வயநாடு மக்களின் துயரை துடைப்பதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி துணை நிற்கும் .
பாஜக சித்தாந்தத்தை பற்றி யார் பேசினாலும் சிபிஐ ரைடு அமலாக்கத்துறை ரைடு என எவ்வளவு பேர் மீது ரைடு செய்ய முடியும் எத்தனை நபர்களை கைது செய்ய முடியும். பாஜக இதுவரை இவர்கள் மூலம் ரைடு நடத்தியதில் எத்தனை நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளார்கள்? தண்டனை பெற்று தந்துள்ளார்கள் இந்த மிரட்டல்கள் மூலம் பாஜக கட்சியில் அவர்களை இணைத்தவுடன் அவர்கள் புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். தற்போது தெலுங்கு தேச கட்சியில் சந்திரபாபு நாயுடு கட்சியில் உள்ள நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் வீட்டில் சோதனை செய்தார்கள். தங்கம், சொத்து ஆவணங்கள் என பல எடுத்தார்கள். குற்றம் சாட்டினார்கள். அவர்கள் உடனடியாக பாஜகவில் இணைந்தவுடன் வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. பாஜகவில் சேர்ந்தால் புனிதர்களாக மாறி விடுவார்களா கங்கையில் குளித்து புனிதர்களாகி விட்டார்களா.
எத்தனை காலம் தான் பழிவாங்கும் நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட போகிறீர்கள் இந்த ஆட்சி எத்தனை நாள் தான் நிலைக்கும் இப்பவே பேசிக் கொண்டிருக்கிறார்கள் மத்தியில் மோடி ஆட்சி இல்லை சந்திரபாபு நாயுடு நிதீஷ்குமார் ஆட்சி என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் எவ்வளவு நபர்களை அவர்கள் பழி வாங்க முடியும்.
கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் வலுவாக இருக்கிறார்களோ கூட்டணி கட்சியினரிடம் பேசி அந்தந்த பகுதிகளில் போட்டியிடுவதற்கு கூட்டணியினரிடம் கேட்டுப் பெறுவோம்” என்றார்.