Madurai: 2026- தேர்தலில் மக்கள் திமுகவிற்கு சுளுக்கெடுத்து "ஷாக்" கொடுப்பார்கள் - செல்லூர் ராஜூ
தி.மு.க., அரசின் மின்கட்டண உயர்வு மற்றும் நியாய விலை கடைகளில் பாமாயில் பருப்பு வகைகள் வழங்காததை கண்டித்து அ.தி.மு.கவினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுரையில் தி.மு.க அரசை கண்டித்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக அண்மையில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளும் தி.மு.க அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலை கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு வகைகள் தற்போது வரை வழங்காததை கண்டித்தும், மதுரை முனிச்சாலை தினமணி டாக்கி சந்திப்பில் அ.தி.மு.க மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான செல்லூர் ராஜூ தலைமையில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தி.மு.க., அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- BNS சட்ட பிரிவின் கீழ் முதன்முறையாக பசுமாடு கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு !





















