பாஜக தலைமையில் கூட்டணி அமையாது - செல்லூர் கே.ராஜூ சூசகம்
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து - புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்..,"2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி.தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி. கூட்டணிக்கு அ.தி.மு.க., தான் தலைமை ஏற்கும், அதில் மாற்றமில்லை. அ.தி.மு.க., தலைமையின் கீழ் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்.
#madurai | உண்மையான விடியல் ஆட்சி வேண்டும் என்றால் எடப்பாடியை வெற்றிபெற செய்யுங்கள். இனி வரும் தேர்தல்களில் எல்லாம் #அதிமுக தான் வெற்றி பெரும் முன்னால் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி !@SelenaHasma | @SellurKRajuoffl | @EPSTamilNadu | @Vijayabaskarofl pic.twitter.com/3c1XS72wOx
— Arunchinna (@iamarunchinna) August 8, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்