சீமான் போராட்டம்: வனத்துறைக்கு எதிராக மாடு மேய்த்ததால் பரபரப்பு! போடிநாயக்கனூரில் நடந்தது என்ன?
வனத்துறை கட்டுப்பாடுகளை மீறி மேய்ச்சலுக்காக சீமான் நடத்தும் இந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்காக சுமார் 500 க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் முந்தல் சோதனை சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டது

போடிநாயக்கனூர் குரங்கணி மலைச்சாலையில் உள்ள அடகு பாறை பகுதியில் இன்று காலை சுமார் 10 மணியளவில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வனத்துறை கட்டுப்பாடுகளுக்கு எதிராக மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் போடிநாயக்கனூர் முந்தல் சோதனை சாவடி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஏழு அடுக்குகளாக காவல்துறையினர் பிரிக்கப்பட்டு ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இன்று காலை மணி அளவில் முந்தல் சோதனை சாவடி அருகே சீமான் சிறப்புரை ஆற்றல் உள்ளதாகவும் அங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடவு பாறைக்கு மாடுகளை அழைத்துச் சென்று சுமார் பத்து மணி அளவில் அங்கு வனத்துறைக்கு எதிராக மாடுகளை மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வனத்துறை கட்டுப்பாடுகளை மீறி மேய்ச்சலுக்காக சீமான் நடத்தும் இந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்காக சுமார் 500 க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் முந்தல் சோதனை சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத் துறையினர் வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் வனத்துறையினரின் தடையை மீறி சீமான் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதற்கு முன்பு முதலில் சிறப்பு உரையாற்றிய சீமான் நியூட்ரினோ தொழிற்சாலைகள் போன்றவைகளுக்கு மலை வளங்களை அழிக்கும் அரசாங்கம் மாடு மீட்பதால் வனப்பகுதி அழிந்து போகும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.கூகுள் நிறுவனமே தனது நிறுவனம் உள்ள தீவை சுற்றியுள்ள காடுகளில் காடுகளை பராமரிக்க நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார்கள். இந்த அறிவாளிகளுக்கு தெரியாதா என்று கேள்விகளை எழுப்பினர்.

முந்தலில் தனது சிறப்புரை முடித்துவிட்டு அடவு பாறை பகுதிக்கு சென்ற சீமான் அங்கே மாடு மேய்க்க முயற்சி ஈடுபட்ட பொழுது ஆங்காங்கே ஏராளமாக குவிந்திருந்த வனத்துறை மற்றும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.அங்கு சீமானுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் சீமான் பகலில் உள்ள தடுப்புகளை அகற்றிவிட்டு மழையில் மாடு மேய்க்க கையில் கம்புடன் சென்றார்.
அவர்களை பின்தொடர்ந்து மேலும் மாடுகளை கொண்டு கிராமத்தினர் கொண்டு செல்லும் பொழுது வனத்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்த பொழுது பலத்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் மாடு மேய்க்க வந்த நபர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டு மாடுகளை வன பகுதிக்குள் ஒட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டத்தை முடித்துவிட்டு சீமான் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.




















