மேலும் அறிய
Advertisement
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - 5 மாதம் கால அவகாசம் வழங்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
உபகரணங்களிலிருந்து கிடைக்கும் அழிக்கப்பட்ட தரவுகள் தொடர்பான விபரங்கள் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்பதால் கால அவகாசம் தேவை" என கோரப்பட்டது
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றத்தில் விரைவாக நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்" என சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றத்தில் ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது.சிபிஐ தரப்பில்,"இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட செல்போன் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் தடய அறிவியல் பரிசோதனைக்காக குஜராத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆய்வு முடிவுகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. அந்த உபகரணங்களிலிருந்து கிடைக்கும் அழிக்கப்பட்ட தரவுகள் தொடர்பான விபரங்கள் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்பதால் கால அவகாசம் தேவை" என கோரப்பட்டது.
கீழமை நீதிமன்றம் தரப்பில், "இந்த வழக்கில் 105 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை 20 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு ஒருவரிடம் மட்டுமே விசாரணை நடைபெறுகிறது. ஆகவே இந்த வழக்கை விசாரித்து முடிக்க ஐந்து மாத கால அவகாசம் தேவை. அதனை வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது. இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி 5 மாத கால அவகாசம் வழங்கியும், 5 மாதத்திற்குள்ளாக கீழமை நீதிமன்றம் சாத்தான்குளம் வழக்கு விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion