மேலும் அறிய

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற கடும் எதிர்ப்பு

ஸ்ரீதரின் அப்ரூவராக கோரிய மனு மீதான விசாரணையின்போது, ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் வழக்கு
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ். கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த  கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய பணிநீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர்கள் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் 2 கட்டங்களாக 2ஆயிரத்தி 427பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
 
அப்ரூவராக மாற அனுமதி கேட்டு மனு
 
இந்த கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சிய விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் தான் அப்ரூவராக மாற அனுமதி கோரி முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில்..,” நான் அப்ரூவல் ஆக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து மற்ற காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும் உண்மைகளையும் நீதிமன்றத்தில் கூற விரும்புகிறேன். எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தையும், மகனையும் இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த வழக்கில் அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன். என்னை மன்னித்து, விடுதலை வழங்கும்பட்சத்தில் அப்ரூவராக மாறி நடந்த உண்மைகளை சொல்கிறேன்” குறிப்பிட்டிருந்தார்.
 
அப்ரூவராக கோரிய மனு ஒத்திவைப்பு
 
பணி நீக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனு குறித்து சிபிஐ பதிலளிக்க, மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுவதற்காக மதுரை மத்திய சிறையில் இருந்து பணிநீக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
 
கடும் எதிர்ப்பு
 
அப்போது ஸ்ரீதரின் அப்ரூவராக கோரிய மனு மீதான விசாரணையின் போது, ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தந்தை மகன் கொலை வழக்கு மற்றும் ஸ்ரீதர் அப்ரூவராக கோரிய மனுக்கள் வரும் ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget