அதிமுக என்ற மின்சார கம்பியில் கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும் - அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
"மின்சார திருட்டையும் தடுக்க முடியாத மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மின்சார கம்பியிலே கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும்" - என கூறினார்.

மின்வெட்டையும் மின்டிஸ்க்கையும் தடுக்க தவறிய மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் அதிமுக என்ற மின்சார கம்பியில் கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை.
ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் - பேசியுள்ளது
"தன்னுடைய பதவி சுகத்திற்காகவும், பதவி பவுசுக்காகவும், இந்த பச்சோந்தி அமைச்சர் நிர்மல் குமார் கொஞ்சம் பழசையெல்லாம் நினைத்து பார்க்க வேண்டும். அதிமுகவின் கருத்து சொல்வது பற்றி கொஞ்சம் நாவடக்கம் தேவை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இது கடைசி அத்தியாயம் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆயுளை நிர்ணயிக்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது, என்று யோக்கியதை இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆயுளை நீங்கள் நிரூபிப்பதற்கு முன்பாக நிர்மல் குமார் அவர்களே உங்கள் பொது வாழ்க்கைக்கு நீங்கள் ஈடுபட்ட அந்த வரலாறு தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், அவரோடு பயணித்த மதுரை மக்களுக்கு புரியும் நிர்மல்குமார் போகாத கட்சியே இல்லை தற்போது த.வே.கவின் அவதார புருஷன் போல பேசுகிறார்.
உழைத்தவர்கள் யார்
இவருக்கு முன்னாலேயே ஆரம்ப கட்டத்திலேயே விஜய் மன்றத்திலே தங்கபாண்டியன், கல்லணை போன்றவர்கள் எல்லாம் ஆரம்ப காலகட்ட விஜய் மன்றத்தில் உள்ளவர்கள். அந்த தம்பிகளுடன் எல்லாம் நாங்கள் 2011 அம்மாவின் தலைமையில் அப்போது சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உழைத்தார்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றிக்கு பாடுபட்ட அந்த தம்பிகளுடன் எல்லாம் எங்களுக்கு நெருங்கிய தொடர்புண்டு. அந்த தம்பிகளெல்லாம் விஜயை உயிராக மதித்து விஜய் தான் உலகம் என்று மதித்து விஜய் தான் எங்களுக்கு எல்லாம் என்று உழைத்து வருகிற அந்த தம்பிகள். இன்றைக்கு கல்லாணை வடக்கு தொகுதியிலும், மதுரை மேற்கு தொகுதியில் தங்கபாண்டியனும் வெற்றி பெற்றுள்ளனர். விஜய் மன்றம் என்று சொன்னால் தங்கபாண்டியன், கல்லணை போன்றவர்கள் தான் அனைவருக்கும் தெரியும் .
எதிர்கால ஜாதகத்தை பார்க்க வேண்டாம்
எநத கட்சிக்கு போனாலும தன்னுடைய பதவியை தக்க வைப்பதற்காக மாற்றிக் கொள்ளும் நிர்மல் குமார் அதிமுகவின எதிர்கால எதிர்கால ஜாதகத்தை பார்க்க வேண்டாம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வலிமையையும் எதிர்காலத்தையும் பொதுச் செயலாளரை பற்றியும் நாக்கில் நரம்புமில்லாமல் நிர்மல் குமார் பேசுகிறார். புதிதாக த.வே.க கட்சிக்கு வந்து தலைமை கழக நிர்வாகியாகி, சட்டமன்றத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு பெற்று ஒன்பது அமைச்சர்களின் முதல் பட்டியலில் இடம் பெற்ற அந்த ஆணவத்திலே தன்னுடைய பதவி சுகத்திற்காகவும் சைரன் ஒலியோடு மதுரையை சுற்றி வலம் வருவதற்காகவும் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆணவவத்திலே பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சமாக இருக்கிறது. அமைச்சர் நிர்மல் குமார் அவர்களே,
நினைவூட்ட எச்சரிக்கையாக சொல்லுகிறேன்
உங்களுக்கு முன்னாலே அமைச்சர் பதவிகளை எல்லாம் பார்த்தவர்கள் அனுபவித்தவர்கள் வயதிலே மூத்தவர்கள் எங்களோடு நீங்களும் கட்சி பணியில் இருந்தீர்கள். என்பதை நினைவூட்ட எச்சரிக்கையாக சொல்லுகிறேன் பழசை மறக்க வேண்டாம். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆளுகிற கட்சியாக இருந்தது மம்தா பானர்ஜி தான் முதலமைச்சராக இருந்தார்கள். அந்த கட்சியில் இன்னைக்கு தோற்றவுடனே 60 சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைக்கு எதிராக போர் கொடி தூக்கி இன்னும் அந்த பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்குது. லோக்சபாவில் உள்ள 28 எம்பிகள் தலைமைக்கு கட்டுப்பட மறுக்கிறார்கள் உட்கட்சி பூசல் எல்லா கட்சியிலும் உள்ளது. அந்த அரசியல் அரிச்சுவட்டை தெரிந்து கொள்ளாத நிர்மல்குமார் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் 98 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அத்தோடு 47 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்று கொடுத்தார். இன்றைக்கு 47 சட்டமன்ற உறுப்பினர்களில் கருத்து வேறுபாடு ஏற்படுகிற போது சில பேருக்கு நீங்கள் பதவி ஆசை காட்டி நீங்கள் ஏமாற்ற நினைத்தீர்கள் அதில் நான்கு பேர்கள் ஏமாந்து போனாலும் மற்ற பெயர்கள் எல்லாம் சுதாரித்துக் கொண்டனர் அம்மாவின் ஆன்மா, புரட்சித்தலைவர் ஆன்மா அவர்களை நல்வழிப்படுத்தி
எடப்பாடியாரிடம் சேர்த்துள்ளது.
இன்றைக்கு எடப்பாடியார் அரசினுடைய குற்றங்களையும் இயலாமையும் எழுப்பி வருகிறார்
மின்சார வாரியத்தில் டிஸ்க் காணாமல் போச்சு என்று சொல்கிறார்கள் வரலாற்றில் இதுவரை ஒரு அரசினுடைய ஆவணம் காணாமல் போனது இல்லை இதை சாதாரணமாக நாம் கடந்து போக முடியாது.
மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்ற தெரியாது
முதலமைச்சர் விஜய் போல சினிமா வசனம் பேசி மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்ற தெரியாது எடப்பாடியாருக்கு. அதேபோல விஜய் போல சினிமா கவர்ச்சி வசனங்களை எடப்பாடியாருக்கு பேசத் தெரியாது. மனதில் பட்டதை வெள்ளோந்தியாக மக்களிடம் மறைக்காமல் பேசுகின்ற ஒரு தலைவர் தான் எடப்பாடியார் இன்றைக்கு ஒரு தொண்டனாக இருந்து இரண்டு கோடி தொண்டர்களை எடப்பாடியார் வழிநடத்தி வருகிறார். நிர்மல் குமார் அவர்களே இன்னைக்கு நீங்கள் பொறுப்பேற்று இருக்கிற மின்சாரத் துறையிலே நாடு முழுவதும் மின்சார வெட்டு காரணமாக மக்கள் குழந்தைகளோடு வீதியிலே வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புறத்தில் மின்சாரம் வெட்டு, இன்னொரு புறரத்தில் மின்சாரம் ஆவணம் திருட்டு. மின்சார வெட்டையும் ,மின்சார திருட்டையும் தடுக்க முடியாத மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மின்சார கம்பியிலே கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும் என கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















