மேலும் அறிய
Advertisement
Madurai: 500 டாஸ்மாக் கடையை மூடிவிட்டு 5000 கடையை திறக்க முயற்சி - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
30 ஆயிரம் கோடி குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை, கள்ளச்சாராயம் மது குறித்து வாய்திறக்கவில்லை, மேகதாது அணை குறித்து வாய் திறக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், திருமங்கலம் ஒன்றியம் ஆலம்பட்டியில் உறுப்பினர் படிவம் திரும்ப பெறும் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழக செயளாலரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். அதில்..,”கருணாநிதி மகன் என்ற அரசியல் பின்புலத்துடன் தான் ஸ்டாலின் திமுக கட்சி தலைவரானார். அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சராகி உள்ளார். ஆனால் எடப்பாடியார் 50 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர் படிப்படியாக கிளைச் செயலாளராக இருந்து உயர்ந்து கழக பொதுச் செயலாளராகி ஒரு கோடியே 49 லட்சம் வாக்குகள் பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளார். கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் ஆவின் கொள்முதல் ,உற்பத்தி அதிகரித்து இருந்தது. தற்போது ஆவின் நிர்வாக சீர்கேடால் அமுல் நிறுவனம் தமிழகத்தில் நுழைந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 25 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆனால் மாற்று வழிவில் 5000 கடையை திறந்து விடுவார், மேலூரில் கூட டாஸ்மாக்கில் மது குடித்து ஒருவர் பலியாகி உள்ளார் மற்றொரு உயிர் ஊசலாடி கொண்டிருக்கிறது. அதேபோல் ஒரு மாணவி தன் தந்தையின் குடியை நிறுத்த கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற செய்தால் தமிழகம் தலை குனிந்து உள்ளது. மக்களின் உரிமையை குறித்து எடப்பாடியார் குரல் எழுப்பி வருகிறார். இது குறித்து பத்திரிகையாளர்கள் ஸ்டாலிடம் கேட்டால் அதற்கு பதில் சொல்ல மறுக்கிறார். அன்று காவிரி பிரச்னைக்காக 21 நாட்கள் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை முடக்கி வெற்றி பெற்றார்கள். இப்போது மேகதாது பிரச்னையில் முதலமைச்சர் வாய் திறக்கவில்லை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைதியாக உள்ளனர்.
30 ஆயிரம் கோடி குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை, கள்ளச்சாராயம் மது குறித்து வாய்திறக்கவில்லை, மேகதாது அணை குறித்து வாய் திறக்கவில்லை, ஆனால் தனது மகனை உதயநிதிக்கு அதிகாரத்தை அளிக்கவும், சாப்பிடவதற்கும் மட்டும் தான் முதலமைச்சர் வாய திறக்கிறார். போக்குவரத்து துறையில் ஒன்னரை லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து நிலையில் தற்போது 20,000 காலி பணியிடங்கள் இந்த போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உதிரி பாகங்கள் பற்றாக்குறை காரணமாக சுமார் இன்றைக்கு 2,000 பேருந்துகள் செயல்படாத ஒரு முடங்கிய நிலையிலேயே இதனால் மக்களுக்கு சேவைகள் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கிறது.
இந்த 2,000 பேருந்துகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்ன காரணம் என்றால் 20,000 பணியாளர்கள் பற்றாக்குறை, உதிரிபாகங்கள் பற்றாக்குறையாகும் இதற்கு பணிமனைகள் நிர்வாக சீர்கேடு ஆகும். மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படாததால், பணியிடங்களுக்கு செல்லும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல வேண்டியதால் தனியார் அரசு பேருந்து கட்டணம் செலுத்தி தான் இன்றைக்கும் செல்கிறார்கள். இதுதான் இன்றைய எதார்த்தமான நிலைமையாக இருக்கிறது. அமைச்சர்கள் புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்கள். புதிய பேருந்து கொள்முதல் செய்தால் தானே புதிய வழித்தடத்தில் பேருந்து விட முடியும். ஏற்கெனவே பழைய வழிதடத்தை ரத்து செய்துவிட்டு, அதை புதிய வழித்தடமாக அமைச்சர்களை திருப்திப்படுத்துவதற்காக ஒரு நகைச்சுவை காட்சி அரங்கேற்றமும் தினந்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது.
பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே இவ்வளவு சிரமங்கள் இருக்கிறது என்று சொன்னால், பள்ளிகள், கல்லூரிகள் திறந்து விட்டால் மாணவர்கள் செல்வதற்கு மிகப்பெரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பள்ளி திறப்பதற்கு முன்பாகவே உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று சொன்னால் மிகப்பெரிய அளவிலே மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த அரசு கவனத்தில் கொள்ளுமா? நாள்தோறும் சுமார் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 1.70 கோடி மக்கள் இன்றைக்கு பயணம் செய்கிறார்கள் இந்த புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 2022,2023 ஆண்டு மானிய கோரிக்கையில்12,000 கோடி வருமானம் ஈட்டிய நிலையில் எரிபொருள், உதிரி பாகங்கள்,ஊழியர்களுக்கு சம்பளம், வட்டி என 17,000 கோடி செலவு எனவும் 5000 கோடி பற்றாக்குறை உள்ளது என்று பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion