மேலும் அறிய
Advertisement
கருணாநிதிக்கு புகழ் சேர்க்க திமுக பாஜகவிடம் வாழ்நாள் அடிமையாக சாசனம் செய்து விட்டது - ஆர்.பி.உதயகுமார்
நாணய வெளியிட்டு விழா, மாநில விழா அல்ல மத்திய அரசு விழா தான் என்று முழு பூசணிக்காயை முதலமைச்சர் ஸ்டாலின் மறைக்க பார்க்கிறார்.
ஆர்.பி.உதயகுமார்
மதுரை காந்தி மியூசியத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மேடைக்கு, மேடை ஸ்டாலின் பேசினார். அதில் பாஜக பாசிச ஆட்சி மோடி ஆட்சிக்கு வரக்கூடாது இதுதான் இந்தியா கூட்டணியின் அஜெண்டா என்று கூறினார். ஆனால் இன்றைக்கு பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் தன் ஆட்சியை காப்பாற்ற விழா எடுக்கிறார். இன்றைக்கு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் பெயர் இடம் பெற்றுள்ளது. ஸ்டாலின் பெயர் இடம் பெற்றுள்ளது. துரைமுருகன் பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கு தலைமைச் செயலாளர்தான் அழைப்புகள் கொடுத்துள்ளார். இந்த நாணய வெளியிட்டு விழாவில் இணை அமைச்சர் பெயர் முருகன் இடம்பெறவில்லை. ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்றார், ஆனால் இந்த நாணய வெளியிட்டுவிழா மாநில விழா அல்ல மத்திய அரசு விழா தான் என்று முழு பூசணிக்காயை முதலமைச்சர் ஸ்டாலின் மறைக்க பார்க்கிறார். இதை கேள்வி கேட்ட எடப்பாடியாரை அரசியல் நாகரீகம் இல்லாமல், தரம் தாழ்ந்து, அரசியல் நாகரிமற்ற முறையில் தனி நபர் தாக்குதலை செய்து, மூளை உள்ளதா என்று கிண்டலும், நையாண்டி மாக பேசியுள்ளார்.
தந்தைக்காக தமிழ்நாடு தன்மானத்தை அடகு வைத்து விட்டார்
இன்றைக்கு நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழாவா, மாநில அரசு விழாவா என்று அடிப்படை அறிவு கூட இல்லாமல் முட்டாள்தனமாக முதலமைச்சர் கூறுவது மக்களுக்கு வேதனை அளித்து வருகிறது. இந்த விழா மத்திய அரசு விழா அல்ல என்று இணை அமைச்சர் முருகன் கூறியுள்ளார். இன்றைக்கு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் திமுக கட்சிக்காரரைவிட புகழ்ந்து பேசினார், என்று அதற்கு சான்றுகளை முதலமைச்சர் கொடுத்துள்ளார். இதே பிஜேபி அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் திமுக ஊழல் கட்சி என்பதை நாடு அறியும் என்றும், ஸ்டாலின் ஊழலை இந்தியா முழுவதும் பார்த்துக் கொண்டுள்ளார் என்று அவரே பேசியுள்ளார். இது ஸ்டாலின் பிஜேபி பாசிச ஆட்சியை உள்ளே நுழையவிட மாட்டோம், வெள்ள நிவாரண நிதி தரவில்லை உள்ளே விடமாட்டோம், அதே போல் நிதி ஆயோக் கூட்டத்தில் பாரதப் பிரதமரிடம் நிதி வேண்டி முறையிடமாட்டேன் எனக்கு தன்மானம் உள்ளது என்று கூறிய முதலமைச்சர், இன்றைக்கு தனது தந்தைக்காக தமிழ்நாடு தன்மானத்தை அடகு வைத்து விட்டார். இன்றைக்கு கருணாநிதிக்கு புகழ் சேர்க்க திமுக பாஜகவிடம் வாழ்நாள் அடிமையாக சாசனம் செய்து விட்டது.
தமிழக உரிமை பறிக்கப்பட்டுள்ளது
இதே அண்ணாமலை திமுகவை அழிப்பேன், கருணாநிதியை பற்றி விமர்சித்தார் ஆனால் இன்றைக்கு அவரே கருணாநிதி சமாதியை கும்பிட்டு சென்றார், மக்கள் இதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அண்ணாமலை தமிழகத்தின் நிலவரம், கலவரம் தெரியாமல் பேசிக் கொண்டு உள்ளார். இதே நாணய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரிடம் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள், நாங்கள் மக்களுக்கு வாக்கு அளித்து கொடுத்தோம் என்று கேட்டிருக்கலாம், அதேபோன்று வெள்ள நிவாரண நிதி குறித்து பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று கேட்டிருக்கலாம் இன்றைக்கு தமிழ் உரிமை காக்கப்பட்டு இருக்கும் ஆனால் இன்றைக்கு தமிழக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உணவு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion