மதுரை ரயில் நிலையத்தை ரூ. 358.63 கோடி மதிப்பில் புனரமைக்க ஒப்பந்த புள்ளி வெளியீடு
இதில் மதுரை ரயில் நிலையம் மட்டும் 440 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தை புனரமைக்க ரூ.358.63 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு; இந்த கட்டுமான பணிகளை 26 மாதங்களுக்குள் முடிக்க ஐஆர்சிஓஎன் - இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் உத்தரவு; விருப்பமுள்ள கட்டுமான நிறுவனங்கள் ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.@drmmadurai | #Madurai pic.twitter.com/urCkrn4Czq
— Arunchinna (@iamarunchinna) August 3, 2022
மேலும் ரயில்வே தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திருச்சி, மதுரை : ரயில் பாதை பராமரிப்பு பணிகள்.. எங்கெங்கு ரயில் போக்குவரத்தில் மாற்றம்?
ரயில் நிலைய வடிவமைப்பு, விரிவான பொறியியல் ஆய்வுகள் பொறியியல் கட்டுமானத்திற்கு முந்தைய மற்றும் கட்டுமானத்திற்குப் பிந்தைய, இடிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள், கொள்முதல், ரயில் போக்குவரத்து, கட்டுமானம், இயந்திரவியல், மின்சாரம், தீ அணைத்தல் என சுமார் 16 வகையான பணிகள் மேற்கொள்ள விருப்பமுள்ள கட்டுமான நிறுவனங்கள் ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, https://etenders.gov.in/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்