மேலும் அறிய

ராமேஸ்வரத்தில் ரூ.4.70 கோடியில் பிரம்மாண்ட ஓடும் தொழிலாளர் ஓய்வறை: பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு அடித்தளம்!

ஓய்வு அறைகள் மூலம் ஓடும்  தொழிலாளர்கள் உரிய ஓய்வெடுத்து ரயில்களை பாதுகாப்பாக இயக்க முடியும். இந்த ஓய்வு அறைக்கு வித்தியாசமாக "அக்கினி தீர்த்தம் குழு பாதுகாப்பிடம்" என பெயரிடப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை.

பொது மேலாளர் துவக்கி வைத்தார் 
 
ரயில்வே லோகோ பைலட்டுகள்,  ரயில் மேலாளர்கள் ஆகியோர் ஓடும் தொழிலாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதால் பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்ய உரிய ஓய்வு அளிக்கப் படுகிறது. நல்ல ஓய்வு எடுக்கும் வகையில் முக்கிய ரயில் நிலையங்களில் ஓடும் தொழிலாளர் ஓய்வறைகள் அமைக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை ரூபாய் 4.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஓய்வு அறை 610 சதுர மீட்டர் கீழ்த்தளமும் 380 சதுர மீட்டர் மேல் தளமும் கொண்டது. ஒரு நேரத்தில் 34 ஓடும் தொழிலாளர் ஓய்வு எடுக்க முடியும். பெண் ஓடும் தொழிலாளர்களுக்கு இரு படுக்கைகள் கொண்ட தனி ஓய்வறை மற்றும் ரயில் இன்ஜின் ஆய்வாளர்களுக்கான ஓய்வு அறையும் இதில் அடங்கும். ஒவ்வொரு அறையிலும் மேஜை, நாற்காலி, படிக்கும் விளக்கு, நிலை கண்ணாடி, உடமைகளை வைக்க தனி மேஜை, கட்டில், மெத்தை, கொசு வலை போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.
 
உடற்பயிற்சி கூடம் போன்ற சிறப்பம்சங்களும் உள்ளன.
 
சமையலறை, சாப்பிடும் அறை, செய்தித்தாள்கள், வார இதழ்கள் படிக்கும் பிரிவு, யோகா மற்றும் தியான அறை, உடற்பயிற்சி கூடம் போன்ற சிறப்பம்சங்களும் உள்ளன. வெளிப்பகுதியில் நடைபயிற்சி மற்றும் காற்றாடுதலுக்கு பசுமை தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓய்வு அறை காற்றோட்டமான சூழலில் ரம்மியமான வர்ணம் பூசப்பட்ட சுவர்களுடன் உள்ளது. பசுமை விளக்குகளும் உள்ளன. ஓய்வு அறைகள் கணிப்பொறி மென்பொருள் மூலம் ஓடும் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படுகின்றதன. கண்காணிப்பு கேமரா கண்காணிப்பும் உள்ளது.  ஓடும் தொழிலாளர்களுக்கு ரயில் பாதுகாப்பு குறித்து நினைவுபடுத்த உள் வளாகத்தில் ரயில் பாதுகாப்பு குறித்த குறு தகவல்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஓய்வு அறையில் ஊழியர்களுக்கு 90 சதவீத மானியத்தில் சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன. ஓய்வு அறையில் உள்ள சிறப்பு பாதுகாவலர் 24 மணி நேரமும் செயல்பட்டு  ஓய்வெடுக்கும் ஓடும் தொழிலாளர்களை குறித்த நேரத்தில் அவர்கள் பணியாற்ற வேண்டிய ரயில்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்கிறார்.
 
ஒப்பந்தத்துடன் ஒப்பந்ததாரர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
 
முழு வளாகத்தையும் பராமரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த ஒப்பந்தத்துடன் ஒப்பந்ததாரர் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஓய்வு அறை பற்றிய குறை நிறைகளை தெரிவிக்க 'கியூ ஆர் கோடு' வசதி கொண்ட மென்பொருளும் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறை குறைகள் உடனடியாக உரிய ஆய்வாளர்கள், அதிகாரிகளை சென்று சேர்ந்து குறைகளை விரைவாக சீர் செய்ய முடியும். இந்த ஓய்வு அறையை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் புதன்கிழமை (ஜூலை 22) இன்று திறந்து வைத்தார். விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, முதன்மை எலக்ட்ரிக் இன்ஜின் பொறியாளர் என்.  பாலாஜி, முதுநிலை கோட்ட பொறியாளர் எம். கார்த்திக், முதுநிலை கோட்ட மின் போக்குவரத்து பொறியாளர் ஏ. ஆர். சுரேந்திரன், பகுதி கோட்ட பொறியாளர் ஸ்ரீ ஹரி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஓய்வு அறைகள் மூலம் ஓடும்  தொழிலாளர்கள் உரிய ஓய்வெடுத்து ரயில்களை பாதுகாப்பாக இயக்க முடியும். இந்த ஓய்வு அறைக்கு வித்தியாசமாக "அக்கினி தீர்த்தம் குழு பாதுகாப்பிடம்" என பெயரிடப்பட்டுள்ளன.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget