ராமநாதபுரம் சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு! 54 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்!
சுகாதாரத்துறையின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணியாற்ற தற்காலிக அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு என்பது இன்றைய இளைஞர்களின் முதன்மை தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. திறன் மேம்பாட்டின் மூலம் தொழில்துறை அனுபவம் பெறும் வாய்ப்புகளை உருவாக்க பல்வேறு திட்டங்கள் அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணியாற்ற தற்காலிக அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. சுகாதார வழங்குநர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், பல் மருத்துவர், ரேடியோகிராப்பர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான பணியில் சேர அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள் : சுகாதார பணியாளர், மருத்துவமனை பணியாளர், பிசியோதெரபிஸ்ட், பல் மருத்துவர் உள்ளிட்ட பதவிகள்
காலிப்பணியிடங்கள் : 54
துறையின் பெயர் : சுகாதாரத்துறை
இப்பணிக்கான விண்ணப்பங்களை ramanathapuram.nic.in மூலம் பதிவேற்றம் செய்யலாம்.
தகுதிகள்
- இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபடியாக 35 வயதைக் கடந்திருக்கக்கூடாது.
- அக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு 40 வயது வரை இருக்கலாம்.
- ஆயுஷ் மருத்துவ அதிகாரி, மாவட்ட ப்ரோகிராம் மேனேஜர், ஆலோசகர், பல்நோக்கு பணியாளர் ஆகிய பதவிகளுக்கு 59 வயது வரை இருக்கலாம்.
- அந்தந்த பதவிக்கான உரிய கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். தூய்மையாளர், மருத்துவமனை ஊழியர், பல்நோக்கு பணியாளர் ஆகிய பதவிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை
ராமநாதபுரத்தில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு நேரியாக சென்றோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், 10,12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றீதழ், கொரோனா காலத்தில் பணியாற்றிருந்தால் அதற்கான சான்றிதழ், அனுபவ சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
விவேகானந்தர்சாலை, கேணிக்கரை, ராமநாதபுரம் - 623501.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.12.2025 மாலை 5 மணி வரை
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்.
ராமநாதபுரத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்படும். அதிலிருந்து தேர்வாகும் நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தப்படும்.





















