(Source: ECI/ABP News/ABP Majha)
மோடி புகைப்படத்துடன் முதல்வர், அமைச்சர்கள் புகைப்படம்- இந்திய புக் ஆஃப் ரெக்கார்டுக்கு பரிந்துரை
’’வீட்டின் மொட்டை மாடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 28 மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்களின் புகைப்படங்களுக்கு நடுவே பிரதமர் மோடியின் பிரம்மாண்ட புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது’’
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் 28 மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட 540 பேர் புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் பிரமாண்ட படத்தையும் வைத்து அசத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரை கிருஷ்ண பிரசாத் புகைப்படத் துறையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கும் சென்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக தனது வீட்டின் மொட்டை மாடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 28 மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்களின் புகைப்படங்களுக்கு நடுவே பிரதமர் மோடியின் பிரம்மாண்ட புகைப்படத்தையும் வைத்து அசத்தியுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதோடு, கிருஷ்ண பிரசாத்-க்கு தங்களின் வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த தம்பதி தட்சிணாமூர்த்தி - ராஜலட்சுமி, இவர்களின் மகன் 22 வயதான கிருஷ்ண பிரசாத். இவர் கொச்சினில் எம்பிஏ படித்து வருகிறார். புகைப்படத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், பட்ட மேற்படிப்புக்காக இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் சென்றுள்ளார். அப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. இதனை பிரதிபலிக்கும் வகையில் ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் 540 புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தரையில் பதித்துள்ளார். பிரதமர் மோடியின் புகைப்படத்தை சுற்றிலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களின் புகைப்படங்களையும், முக்கியமான மத்திய அமைச்சர்களின் புகைப்படங்களையும் அவர் பதித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் புகைப்படங்களுக்கு நடுவே பிரதமர் மோடியின் புகைப்படம் அமைந்துள்ளது. இந்த முயற்சி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணபிரசாத் நம்மிடம் கூறுகையில் "இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் அரசியல் கட்சி தலைவர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தரையில் பதித்து செய்துள்ளேன். பிரதமர் மோடி எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்குள்ளவர்களின் பாரம்பரிய முறைப்படியான உடைகளை அணிவார். அதன்படி அவருடைய உருவங்களை நான் வரைந்து வருகிறேன். இது 25 நாட்களில் 540 புகைப்படங்களை சேகரித்து டிசைன் செய்யப்பட்டது. 30 அடி நீளம், 18 அடி அகலத்தில் அனைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஒட்டுவதற்கு ஒரு மணி நேரம் 49 நிமிடங்கள் ஆனது" என மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார்.
கன்னியாகுமரியில் ஒயர் திருட சென்ற இடத்தில் உயிரைவிட்ட 2 திருடர்கள்