மேலும் அறிய
Advertisement
Pongal 2022 : மண்ணை சுவைச்சுத்தான் தேர்வு செய்வோம்.. பூவந்தி பொங்கல் மண்பானை கலைஞர்களின் கதை..
’ஒரு உருண்ட மண்ணு எடுத்து நாக்குல ருசி பார்ப்பேன்', ’உப்பு இல்லாம இருந்தாதான் வேலைக்கு ஆகும்' என்று மண்ணின் தேர்வு முறையை சொன்னார் அந்த மண்பாண்ட கலைஞர்.
"மீன் குழம்பு, கறிக் குழம்பு வச்சா பக்கத்து வீடு வரைக்கும் மணக்கும், அதையே மண் சட்டில வச்சு சமைச்சா தெருவே மணக்கும். மணக்க வைக்குற மண்சட்டிய சுட்டு எடுக்குற வாசனைய சொல்லியா தெரியவேணும் அந்த அளவுக்கு பானை சுடும் வாசம் அப்படி இருந்தது. தை பொங்கல் நெருங்கும் சூழலில் மண்பாண்டம் செய்யும் இடங்களை சுற்றி வந்தோம். தென் மாவட்டங்களில் மண்பாண்டம் செய்ற பணிய மானாமதுரை மண்பாண்ட கலைஞர்கள் வெகுவா ஈடுபடுறாங்க. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, காரைக்குடி, பூவந்தி பக்கம் இன்னமும் அதிகளவு மண்பாண்ட கலைஞர்கள் தொழில உயிர்ப்போட வச்சுருக்காங்க.
சீசனுக்கு தகுந்தவாறு ஒவ்வொரு மாதிரியான மண்பாண்ட பொருட்களை வார்த்து எடுக்குறாங்க. பூவந்தி வேளார் தெருவில் அதிகளவு பொங்கல் பானை தயாராகிக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவ மழை குறைந்த பின்பு தான் பொங்கல் வேலையை துவங்கியுள்ளதால் அவர்களால் ஆடர்களை விரைவாக முடிக்க முடியவில்லை என வேதனை தெரிவித்தனர். மண்பாண்ட பொருட்கள் இந்த காலகட்டத்துக்கு ஏற்றார் போல் கண்கவரும் மண்பாண்ட பொருட்களாவும் மாற்றி வச்சுருக்காங்க. இசைக் கருவிகளின் மாதிரிகள் கூட இருந்தது. சுட்டி விளக்கில் இருந்து பிரமாண்ட சிலைகள் வரைக்கும் வார்த்திருந்தாங்க.
"ஒரு உருண்ட மண்ணு எடுத்து நாக்குல ருசி பார்ப்பேன்' உப்பு இல்லாம இருந்தாதான் வேலைக்கு ஆகும்'. என்று மண்ணின் தேர்வு முறையை சொன்னார் மணிகண்டன். பச்ச பிள்ளை தலைய இதமா தட்டி உருட்டுவது மாதிரி ஒவ்வொரு பானையையும் பக்குவமாய் கையால்கிறார். தொடர்ந்து நம்மிடம் அவர் பேசுகையில்..., திருகைல வச்சு செய்ற ஒவ்வொரு பொருளா வார்த்து எடுப்பது ஈசிதே, ஆனா பானையா தட்டி எடுக்கிறதே கஷ்டம். ஒரு நாளையில லாரி ஜாமான செஞ்சுபுடுவே அதை தட்டி எடுக்கணுமே அதுதே பெருசு. ஒவ்வொரு பானைக்கும் காயவச்சு, காயவச்சு மூணு முறை வேலை இருக்கு. பாவம் எங்க அம்மா கைல தட்டி எடுக்குறது கஷ்டமா இருக்கும். குறுக்கு வழிக்க உட்காந்து உள்கூடா கல்லும் வெளிய கட்டையும் வச்சு தட்டுவாங்க. அப்புடி தட்டி சுத்தி எடுத்தாதே நல்ல பானையா பினிசிங் கிடைக்கும்.
இப்ப என் வீட்டுகாரம்மா கூட பழகிட்டு இருக்கா. ஆனா அவ கைக்கு இன்னும் வரல. என் அண்ணெ மக சின்ன பொண்ணுதே. இப்பதைக்கு பள்ளியோடம் லீவுங்குறதால அம்மாக்கு உதவி செய்றா. அவளுக்கு கொஞ்சம், கொஞ்சம் பானை தட்ட கை வருது. நல்லா பயிற்சி எடுக்கிட்டா அதுவும் எங்க அம்மா மாதிரி தட்டிப்புடும். சிவகங்கைல மானாமதுரைக்கு அடுத்து பூவந்திதான். இப்ப அங்க கூட பானை தட்ட ஆள் இல்ல. இங்க தான் செய்றோம். மானாமதுரைல சட்டி, பானை செய்றவங்க எல்லா எங்க சொந்த பந்தம்தான்.
பொண்ணு எடுத்து, பொண்ணு குடுத்துருக்கோம். இந்த வருசம் அதிக மழையினால தொழில் கொஞ்சம் முடக்கம்தான். பத்தாதுக்கு கொரோனா வேற ஊட வந்து ஆட்டைய கலச்சுபிடிச்சு. இருந்தாலும் தொழில் சொந்தமிங்குறதால தப்பிச்சோம். எங்க கிட்ட நிறைய பேரு மண்சட்டி அதிகமா வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. பேஸ்புக், யூ-ட்யூப்புனு எல்லாத்துலையும் மண்பானையில சமைக்கிறதால மக்கள் தேடி வாராங்க" என்றார் புன்னகையுடன்.
பொங்கல் பானை தட்டிக் கொண்டிருந்த மீனாட்சி...," நானும் எங்க வீட்டுக்காரர் மட்டும்தான். எங்களுக்கு பிள்ள குட்டிக இல்ல. சட்டிப் பானை செஞ்சு தான் பிழைக்குறோம். ஒரு நாளைக்கு 40 பானை ஐம்பது பானைதான் செய்ய முடியுது. இந்த வருசம் மழை ரெம்ப அதுனால பொழப்பு சரியா ஓடல. பொங்கல ஒட்டி வெயிலு அடிக்கிறதால கொஞ்சம் வேலை பார்க்க முடியுது. எங்க வீட்டுக்காரருக்கும் முடியல இருந்தாலும் வைராக்கியமா எனக்கு திருக ஒட்டிக்கொடுக்கிறாரு. அவர் செய்ய, செய்ய பானையையும் நான்தான் தட்டி எடுப்பேன். இந்த வருசம் நிறைய பானை கேக்குறாங்க செஞ்சுத்தான் கொடுக்க முடியல" என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion