மேலும் அறிய
Advertisement
"10 லட்ச ரூபாய் கொடுத்தது தமிழ் மண்ணில் தீய முன்னுதாரணம் - உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு !
கள்ளச்சாராய உயிரிழப்பில் பத்து லட்ச ரூபாய் கொடுத்தது தமிழ் மண்ணில் தீய முன்னுதாரணம் : மேலூரில் நடைபெற்ற புத்தக விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு.
தமிழ் மண்ணில் உருவாக்கி இருப்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞர்கள் நல்வழிப்படுத்த வேண்டும் என பேசினார்.
Kallakurichi Illicit Liquor
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150 -க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். மெத்தனால் கலந்த சாராயம் பாக்கெட்டுகளை வாங்கி மது பிரியர்கள் குடித்தின் விளைவாக உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மேலும் திடீர் வாந்தி, மயக்கம், வயிற்று எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து பலர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக தற்போது வரை 57 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 100 -க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.
அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளச்சாராய உயிரிழப்பில் பத்து லட்ச ரூபாய் கொடுத்தது தமிழ் மண்ணில் தீய முன்னுதாரணம் என மேலூரில் நடைபெற்ற புத்தக விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி பேசியுள்ளார்.
நீரதிகாரம் எனும் புத்தகம் பற்றிய நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பென்னி குவிக்கின் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்று நிகழ்வுகள் எனும் தலைப்பில் நீரதிகாரம் எனும் புத்தகம் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் , பேச்சாளர் பாரதி பாஸ்கர், நீரதிகாரம் நூல் எழுத்தாளர் அ.வெண்ணிலா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீதியரசர்
அப்போது நிகழ்வில், நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார் பேசுகையில்...,”வடக்கே சுதந்திர போராட்டம் தீவிரமடையும் முன்பே தமிழகத்தில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியார் போன்றோர் போராட்டத்தை முன்னெடுத்தனர். தமிழகத்தில் நூறுநாள் வேலைத்திட்டம் மூலம், கிராமப்புறங்களில் இளைஞர்கள் சோம்பேறியாக வைக்கப்பட்டு வருகின்றனர். அதில் பாதி சம்பளம் பெறும் இளைஞர்கள் அதை ஒரு கடையில் கொடுத்து உண்மையான குடிமகனாக மாறிவிடுகின்றனர். அதிலும் சிலர் மலிவு விலையில் கிடைக்கின்றாதா என பார்க்கின்றனர்.
அப்படி தேடிப்போன ஒரு கூட்டம் தான் கள்ளக்குறிச்சியில் மாண்டு போயுள்ளனர். இதற்கு 10 லட்சம் கொடுத்து தீய முன்னுதாரணம் தமிழ் மண்ணில் உருவாக்கி இருப்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞர்கள் நல்வழிப்படுத்த வேண்டும்" என பேசினார்.
பாரதி பாஸ்கர்
தொடர்ந்து பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசுகையில்,”எழுத்தாளரின் மாற்று கருத்தை பதிவு செய்தால் கூட நிறைய பேருக்கு தற்போது பொறுத்த கொள்ள முடியவில்லை. ஆங்கிலேயர்கள் சுரண்டலுக்காக தான் ரயில் வழித்தடங்களை நிறுவினர். அவர்களுக்கு பயன்படும் வகையில் இங்குள்ள தானியங்களை கப்பல் மூலம் இங்கிலாந்து கொண்டு செல்லவே இதுபோன்ற திட்டங்களை அவர்கள் கொண்டு வந்தனர்.
ஆனால் இங்கிருந்தவர்கள் பஞ்சத்தால் வாடினார். 20 விழுக்காடு மக்கள் அப்போது மதுரையில் பஞ்சத்தால் இறந்துள்ளனர். இதனை மாற்ற பென்னிகுவிக் மாதிரியான ஆட்கள் இங்கு தீவிரம் காட்டியுள்ளனர்” என பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion