பெண்ணை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்ட பழனியை சேர்ந்த இளைஞர் கைது
உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரை ஆபாசாமாக சித்தரித்து முக நூலில் வெளியிட்ட திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர் கைது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகின்றது
மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தான் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த, தனது புகைப்படங்களை பயன்படுத்தி யாரோ முகநூலில் போலியான கணக்கு உருவாக்கி அதில் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தும், கைபேசி எண்ணையும் பதிவேற்றம் செய்ததாகவும், அதனால் தொடர்ந்து தொந்தரவு அழைப்புகள் வருவதாகும் கொடுத்த புகாரின் பேரில், மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி, சைபர் கிரைம் பிரிவில் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் சார்மி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் பிரசாத் என்பவர் என்று தெரியவந்தது. முகநூலில் போலி கணக்கு மூலம் மதுரையை சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததும், அவரிடம் விசாரணை நடத்தியதில் போலியான கணக்கு மூலம் ஆபாச படங்களை அனுப்பி, ஆபாச வார்த்தைகள் பேசியதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பிரசாத் வேலூர் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்கவும் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அது குறித்து அச்சமின்றியும், தயக்கமின்றியும் காவல்துறையினரை அணுகி புகார் அளிக்கலாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
மதுரைக்கு குடி நீர் தர எதிர்ப்பு தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
மதுரைக்கு குடிநீர் எடுத்து செல்வதை எதிர்ப்பு தெரிவித்து தேனியில் விவசாயிகள் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அமோக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள்..!தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,