குடமுழுக்கில் தரிசனம் செய்ய முடியாத ஏக்கம்... இன்று கொடியேற்றம்.. முருகனை தரிசிக்க பழனியில் குவிந்த பக்தர்கள்!
பழனி முருகன் கோவில் குடமுழுக்கில் தரிசனம் செய்ய முடியாததாலும், வாரவிடுமுறை என்பதாலும் இன்று பழனியில் சாமி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு முருகப்பெருமான் மலை மீது தண்டாயுதபாணியாக காட்சி அளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலின் மூலவர் சிலை பதினெண் சித்தர்களில் ஒருவரான போகரால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் பழனி முருகனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.
Erode By Election: நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை; எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை கிடைக்குமா?
சிறப்பு வாய்ந்த பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் பழனி முருகன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. அதையடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்று பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா சில தினங்களுக்கு முன்பு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள முடியாத பக்தர்கள் தொலைக்காட்சி மூலமாக வீட்டில் இருந்தபடியே கண்டு மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று முதல் தைப்பூசம் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ள நிலையில் அதனை காண்பதற்கும் என பக்தர்கள் இன்றைய தினம் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். குடமுழுக்கு முடிந்து முருகனை தரிசனம் செய்ய ஆர்வமாக மலை மீது சென்று வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலை மீது சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்து கீழே இறங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்