மேலும் அறிய

Ulundurpet Bus Accident: கள்ளக்குறிச்சி அருகே ஆம்னி பேருந்து - லாரி விபத்து..! ஓட்டுனரின் அஜாக்கிரதை காரணமா?

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் தனியார் ஆம்னி பேருந்து மாடுகள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் தனியார் ஆம்னி பேருந்து எருமை மாடுகள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இருவர் உயிரிழப்பு, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட நான்கு மாடுகளும் இறந்தது இதனால் அப்பகுதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

சென்னையில் இருந்து 35 மேற்பட்ட பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது, அந்த பேருந்தை திருநெல்வேலியைச் சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார் இந்த தனியார் ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் தனியார் பால் பண்ணை அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் அஜாக்கிரதையால் முன்னாள் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

2பேர் உயிர்ழப்பு

இந்த விபத்தில் தனியார் ஆம்னி பேருந்தில் இடது புறத்தில் பயணம் செய்த ஒரு ஆண் ஒரு பெண் என இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.  இதே போல விபத்தில் சிக்கிய லாரியில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த  உளுந்தூர்பேட்டை போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து உயிர் இழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

போலீஸ் விசாரணை :

மேலும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த விபத்தால் 2 மணி நேரத்திற்கு மேலாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உளுந்தூர்பேட்டை நகராட்சி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து லாரியில் மீதம் உள்ள மாடுகளை பத்திரமாக மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
Uttarakhand Accident:  ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
Uttarakhand Accident:  ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக யுவ புரஸ்கார் விருது..  தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு அறிவிப்பு!
”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக யுவ புரஸ்கார் விருது.. தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு அறிவிப்பு!
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட்  தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட் தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
T20 World Cup 2024: சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Embed widget