Palani: காவல் நிலையத்தில் பெண் காவலர்களுக்கு வளைகாப்பு - பழனியில் நெகிழ்ச்சி
பழனியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் கர்ப்பமாக உள்ள பெண் காவலர்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
முதன்முறையாக பிரசவத்திற்கு தயாராகும் பெண்களுக்கு எப்போதுமே ஒரு அச்ச உணர்வு இருக்கும். மேலும் மற்றவர்கள் கூறியதை கேட்டு பிரசவ வலி என்ற அந்த மறுபிறப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருக்கும். அப்படி இருக்கும் நிலையில் பதற்றமும் பயமும் வருவது யதார்த்தம் தான். அந்த பயத்தை போக்கி உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையூட்டும் வகையில் வளையல் அணிவித்து சந்தனம் குங்குமம் தடவி அட்சதை தூவி வாழ்த்தும் ஒரு நிகழ்வு தான் வளைகாப்பு.
பெண் காவலர்களுக்கு வளைகாப்பு:
பொதுவாக கர்ப்பிணிகள் வீட்டில் இருந்து ஓய்வெடுப்பது தான் வழக்கம். ஆனால் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் கர்ப்ப காலத்தில் பணியாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. விடுமுறை அளிக்கப்பட்டாலும் ஒரு சில பெண் காவலர்கள் பணி சூழல் காரணமாக பணியற்ற வேண்டிய நிலை இருக்கிறது. அதே நேரத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக காவல் நிலையங்களில் சக காவலர்கள் வளைகாப்பு வைத்து வாழ்த்தும் சம்பவங்களும் நடைபெற்று வருவது வழக்கம் தான் .
அப்படி ஒரு சம்பவம் தான் பழனியில் நடைபெற்றிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் பெண் காவலர் பிரியா மேரி ஆகிய இரு காவலர்களுக்கும் இருவரும் கர்ப்பமாக உள்ளனர். இந்நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்கள் சார்பில் இருவருக்கும் மகளிர் காவல் நிலையத்திலேயே இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரு காவலர்களுக்கும் பழங்கள் மற்றும் சீர்வரிசை வைத்து, வளையல் அணிவித்து, 5 வகையான சாப்பாடு செய்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி டிஎஸ்பி தனஜெயன் தலைமையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு கர்ப்பிணிகளை வாழ்த்தினர்.
சக காவலர்கள் மகிழ்ச்சி:
இரு காவலர்களுக்கும் பழங்கள் மற்றும் சீர்வரிசை வைத்து, வளையல் அணிவித்து, 5 வகையான சாப்பாடு செய்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி டிஎஸ்பி தனஜெயன் தலைமையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வியின் ஏற்பாட்டில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு கர்ப்பிணிகளை வாழ்த்தினர். கர்ப்பமாக உள்ள பெண் காவலர்களுக்கு உடன் பணிபுரியும் சக காவல் துறையினர் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.