திரிசுதந்திரர்கள் தொடர்பான வழக்கு: இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவு ரத்து
திரிசுதந்திரர்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தமிழ்நாடு மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி முடிவு எடுப்பதற்கு தடை விதித்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மின்சாரம் வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை, தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் மற்றும் சில நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. இந்தநிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும்போது, ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து தனி நீதிபதி மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை, மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக மின்வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மின்வாரியம் சார்பிலும், எதிர்தரப்பினர் சார்பிலும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற செப் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.