அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்விதுறையோடு இணைக்க எதிர்ப்பு.. விவரம்..
திண்டுக்கல் , தேனி பகுதிகளில் அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளி கல்வி துறையோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் அரசு கள்ளர் பள்ளிகளை புறக்கணித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு பள்ளிகளின் சீரமைப்பு மற்றும் பெயர் மாற்றம் குறித்து முன்னாள் நீதிபதி சந்துருவின் தனிநபர் அறிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் நலப் பள்ளி மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் ஜாதிப் பெயர்களை அகற்றி அரசு பள்ளிகளாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு சீரமைப்பு கருத்துக்கள் குறித்து சுமார் 660 பக்கங்கள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளி துறையோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதியரசர் சந்துரு அவர்களின் ஒரு நபர் கமிஷன் பரிந்துரையை திரும்ப பெற வலியுறுத்தியும் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் இன்று வத்தலகுண்டு நிலக்கோட்டை பகுதிகளில் செயல்படும் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில தொடக்கப் பள்ளிகளில் முற்றிலும் குழந்தைகள் வராமல் வகுப்புகள் வெறிச்சோடி காணப்படுகிறது . இதேபோல் காலை சிற்றுண்டி திட்டத்திற்கும் குழந்தைகள் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் கள்ளர் சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக பள்ளிகள் இயங்கி வருகின்றன.
கள்ளர் சீர் மரபினர் பள்ளிகளை அரசு பள்ளிகளில் என மற்றும் அரசு ஆதிதிராவிட பள்ளிகளை அரசு பள்ளிகளின் பெயரை மாற்றி விட வேண்டும் என்ற அறிக்கையினை திரும்ப பெற கோரி இன்று கம்பம் உத்தமபுரம் அரசு கள்ள துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அரசு கள்ள துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் தங்களது வகுப்பினை பெற்றோர்களுடன் புறக்கணிப்பு செய்தனர்.
மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணிப்பு செய்ததால் மாணவ மாணவிகள் இல்லாததால் வகுப்புகள் வெறிச்சோடி காணப்பட்டது. மாணவரின் பெற்றோர் கூறும்பொழுது அரசு கள்ளப் பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வித்துறை கிடைக்கும் முன்னுரிமையால் சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக என்னுடைய மகனை இன்று ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பு செய்து அழைத்து செல்கிறேன் என்று கூறினார்.
மேலும் கள்ளர் சீர் மரபினர் பள்ளியின் கீழ் பயின்று வரும் மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் நலத்திட்டங்கள் இட ஒதுக்கீடு உள்ளிட்டு வகைகள் இதன் மூலம் நிறுத்தப்படும் எனவும் எனவே அரசு கள்ளர் சீர் மறவினர் மாற்றம் செய்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.