ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
நகராட்சி ஆணையர் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
ஆக்கிரமிப்பு என்று தெரிந்தாலும் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியிலுள்ள சேவியர் கோவில் தெருவில் தனிநபர் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு.
வழக்கு குறித்து மேலூர் நகராட்சி ஆணையர் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் சாயிட் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாக்கல் செய்த மனு. அதில், "மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள சேவியர் கோவில் தெருவில் (அப்துல் கலாம் ஆசாத் தெரு) தனிநபர் செய்துள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மதுரை மாவட்டம், மேலூர் பகுதியிலுள்ள சேவியர் கோவில் தெருவில் தனிநபர் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆக்கிரமிப்புக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. உடனடி நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை
ஆக்கிரமிப்பு என்று தெரிந்தாலும் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. என கருத்து தெரிவித்தனர். மேலும் வழக்கு குறித்து மேலூர் நகராட்சி ஆணையர் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
வழக்கு 2
மின் கம்பம் அமைக்க வெட்டப்பட்ட மரங்களுக்கு ஏற்ப சாலையின் மறுபுறத்தில் இரு மடங்கு புதிய மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் - தலைமை நீதிபதி
லால்குடியிலிருந்து- குக்கூர் சாலை வரை மின் கம்பங்களை அமைக்கும் போது மரங்களை வெட்டாமல் மாற்றுப்பாதையில் மின்கம்பங்கள் அமைக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
திருச்சி லால்குடியை சேர்ந்த அசோக் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.அதில், "திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள எல்.அபிசேகபுரம் கிராமத்தில் 200 குடும்பங்கள் வசிக்கின்றது. இந்த கிராமத்தில் துணை மின்நிலையம் அமைப்பதற்காக லால்குடியிலிருந்து குக்கூர் சாலையில் பனை மரங்கள் உள்ள பகுதியில் பனை மரங்களை வெட்டி மின் கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
50 ஆண்டு பழமையான பலன் தரும் பனை மரங்களை வெட்டாமல், மாற்று பாதையில் மின் கம்பம் அமைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மின்கம்பங்களை அமைப்பதற்கு 13 பனை மரங்களை வெட்ட வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், மின் கம்பங்கள் அமைக்கும்போது முடிந்த அளவு மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் தான் மரங்களை வெட்ட வேண்டும். வெட்டப்பட்ட மரங்களுக்கு ஏற்ப சாலையின் மறுபுறத்தில் இரு மடங்கு புதிய மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தரை.