எம்ஜிஆர் காட்டிய அறவழியில் நடக்கிறோம் - இரட்டை இலை சின்னம் குறித்து ஓபிஎஸ் விளக்கம்
தாங்கள் எம்ஜிஆர் காட்டிய அறவழியில் நடப்பதாகவும் இரட்டை இலை சின்னம் குறித்து நியாயமான வழியில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
தனது 30வது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை ஏறினார். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேய தளபதி ஆலன்துரையிடம் வரி கட்ட மறுத்த நிலையில், ஜாக்சன்துரையை களமிறக்கியது ஆங்கிலேயப் படை. ஆரம்பத்தில் ஜாக்சன் துரையுடன் நட்புறவாக சென்ற வீரபாண்டிய கட்டபொம்மன், ராமநாதபுரம் அரண்மையில் ஜாக்சன் துரையை வீரபாண்டியன் தமது சகோதரர்களுடன் சந்தித்தார். ஆனால் ஜாக்சன் துரை, வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்ய உத்தரவிட்டதால், இருதரப்புக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் சகோதரர்களுடன் தப்பினார்.
இதன் பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் பானர்மேன் ஆங்கிலேய படை யுத்தம் நடத்தியது. இந்த யுத்த காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதி தானதிபதி ஆங்கிலேயரிடம் சிக்கி தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனும் அவரது சகோதரர்களும் அடைக்கலம் தேடி தமிழ் குறுநில மன்னர்களின் அரண்மனைகளுக்கு சென்று உதவி கேட்டு அடைக்கலம் புகுந்தனர். அங்கு அவர் காட்டிக் கொடுக்கப்பட்டதால், புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அரண்மனையில் ஆங்கிலேயர் படையால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார். பின்னர் கி.பி. 1799-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். இந்த நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளில் அவரது உருவ படத்திற்கும் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்த்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கமாகி வருகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மன் 266 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழக முன்னாள் முதல்வரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம். திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் சூரியமூர்த்தி இரட்டை இலை சின்னம் குறித்து தொடுத்த வழக்கு குறித்து கேள்விக்கு அவர் பார்த்துக் கொள்வார் என்றும், இரட்டை இலை சின்னம் கொடுக்கக் கூடிய வழக்கில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதற்கு தாங்கள் எம்ஜிஆர் காட்டிய அறவழியில் செல்வதாகவும் பதில் அளித்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் 266 வது பிறந்தநாள் விழா நாளான இன்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், அரண்மனை வளாக முன்பு அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் முழு திருவுருவசிலைக்கு தமிழக முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
போடிநாயக்கனூரில் உள்ள அரண்மனை வளாகத்திற்கு சென்று ஊர்வலமாக வந்து கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள், துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு மெளனமாக இருந்த ஓபிஎஸ் மேலும் இரட்டை இலை சின்னம் குறித்து உயர் நீதிமன்றம் கூறிய கருத்துகளின் அடிப்படையில் திண்டுக்கல் வழக்கறிஞர் சூரியமூர்த்தி தொடர்ந்த பொது நல வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய பொழுது அதை அவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் தாங்கள் எம்ஜிஆர் கட்டிய அறவழியில் நடப்பதாகவும் இரட்டை இலை சின்னம் குறித்து நியாயமான வழியில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.