மேலும் அறிய
”அக்கா என்ன காப்பாத்து” - ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுமியை மீட்ட சகோதரி...
ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுமி மீட்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
![”அக்கா என்ன காப்பாத்து” - ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுமியை மீட்ட சகோதரி... nine year old girl rescued after falling into a deep well in sivaganga ”அக்கா என்ன காப்பாத்து” - ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுமியை மீட்ட சகோதரி...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/12/e86a76c33fa4f55c76641fa8d005b743_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிறுமிகள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்த மணக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவருடைய குழந்தைகள் பேபி 14 வயது, ஹரிணி -9 வயது இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் நேற்று முன்தினம் மாலை கிராமத்திற்கு வெளியே காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது சிறுமி ஹரிணி காட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் திடீரென்று தடுமாறி விழுந்தாள். "அக்கா.. காப்பாத்து" என அழுதுகொண்டே கூக்குரலிலிடும் சத்தம் கேட்டு பேபி அங்கு ஓடி வந்தாள். அதற்குள் குழந்தை ஹரிணி மண்ணுக்குள் புதைய ஆரம்பித்துவிட்டார்.
இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
![”அக்கா என்ன காப்பாத்து” - ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுமியை மீட்ட சகோதரி...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/12/35da8e303456ea17685f72324f93ee3a_original.jpg)
சிறுமி உடல் முழுவதும் உள்ளே சென்று அவளது தலை மட்டும் வெளியே தெரிந்தது. இதனால் பதறிப்போன பேபி, தனது தங்கை ஹரிணியின் தலைமுடியை பிடித்து மேலே தூக்கினாள். பேபியும் அலறியபடியே தங்கையை காப்பாற்ற முயன்றாள். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களும் வந்து அந்த சிறுமியை வெளியே தூக்கினர். அப்போதுதான் அது ஆழ்குழாய் கிணறு என தெரியவந்தது. காட்டுப்பகுதியில் போடப்பட்ட தண்ணீர் இல்லாத ஆழ்குழாய் கிணற்றை ஒப்பந்ததாரர்கள் குழாயை எடுத்து விட்டு மண்ணை மூடிவிட்டு சென்று இருக்கிறார்கள். சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அந்த பயன்படுத்தப்படாத ஆழ்குழாய் கிணறு பகுதி பள்ளமாக மாறியுள்ளது.
![”அக்கா என்ன காப்பாத்து” - ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுமியை மீட்ட சகோதரி...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/12/6928ab8c229ae3dd58627a680230b0f8_original.jpg)
இது தெரியாமல் அங்கு சுற்றித்திரிந்த சிறுமி உள்ளே விழுந்தார். இந்நிலையில் பயன்படுத்தாத ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் அந்தோணிராஜ் மற்றும் மருத்துவ குழுவினருடன் அங்கு விரைந்து சென்றனர். அந்த மாணவியை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து நலமுடன் இருப்பதாக அறிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி யது.இதுபற்றி தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அந்த ஆழ்குழாய் கிணற்றை உடனடியாசு மூடும்படியும் இதற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion