மேலும் அறிய

NIA Raid: தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் என்.ஐ.ஏ சோதனை - இருவர் கைது

தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை இருவர் கைது.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம்மெட்டு சாலையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொது செயலாளர் சாதிக் அலி வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேர சோதனைக்கு பின் சாதிக் அலியை NIA அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.அப்போது சாதிக் அலியின் உறவினர்கள் NIA அதிகாரிகளின் வாகனம் முன் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இந்த சோதனையின் போது கூடலூர் காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டி தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சில ஆவணங்கள் கைபற்றபட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. அதிகாலை திடீரென  தேசிய புலனாய்வு முகமை மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

NIA Raid In Chennai: காலையிலேயே அதிரடி... சென்னையில் முகாமிட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை

NIA Raid: தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் என்.ஐ.ஏ சோதனை - இருவர் கைது

இதேபோல திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் மதுரை மண்டல தலைவர் முகமது கைசரை வீட்டில் இருந்து என்.ஐ ஏ.அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது கைசர் (50). பழனியில் டீக்கடை நடத்திவரும் முகமதுகைசர் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி அன்று டீக்கடையில் இருந்த முகமதுகைசரை (என்.ஐ.ஏ)தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் பழனி நகர காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று மூன்று நாட்களாக விசாரணை நடத்திய நிலையில்  எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சதாம் என்பவரிடமும் விசாரணை நடத்தினர்.

HBD Sai Pallavi: மேக்கப் போடலன்னாலும் அழகுதான்.. விதிகளை உடைத்த பேரழகி.. சாய்பல்லவி பிறந்தநாள் இன்று..

NIA Raid: தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் என்.ஐ.ஏ சோதனை - இருவர் கைது

Shikhar Dhawan, IPL Record: சாதனை மேல் சாதனை.. ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் ஷிகர் தவான்...!

மேலும் பழனி சண்முகநதி அருகே உள்ள தக்வா பள்ளிவாசல் மற்றும் ஈத்கா மைதானம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். டில்லியில் இருந்து வந்துள்ள 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர்  ஜனவரி மாதம்  விசாரணையில் தடைசெய்யபட்ட  பாப்புலர் ப்ர்ண்ட் ஆஃப் இந்தியா மதுரை மண்டல தலைவர் முகமது கைசர்,  கட்சியின் உறுப்பினர்கள் சதாம், ஜியாவுல்ஹக் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஹபீப் ரகுமான் ஆகிய நால்வரிடம் ஜனவரி மாதம் விசாரணை நடத்திய நிலையில்   என்ஐஏ அதிகாரிகள் பழனியில் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் முகமது கைசர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள்  இரண்டு மணி நேர சோதனைக்கு பின் முகமது கைசரை கைது செய்து சென்னைக்கு  அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Embed widget