மேலும் அறிய

Navratri 2024: சுந்தரர் அலங்காரத்தில் எழுந்தருளிய மதுரை மீனாட்சியம்மன்.. பரவசத்தில் பக்தர்கள்

கொலுமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்து சென்றனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா;  5 ஆம் நாளில் மதுரை மீனாட்சியம்மன் சுந்தரர் அலங்காரத்தில்  எழுந்தருளிதை பக்தர்கள் தரிசித்தனர்
 
சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை பண்டிகைகள்
 
புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகள் வட இந்திய மாநிலங்களில் நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது நாடு முழுவதும், வெவ்வேறு இடங்களில் பல்வேறு வழி முறைகளில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பன்முகத்தன்மையும், ஒற்றுமையும், தேவி வழிபாடும், பெண் தெய்வ போற்றுதலும் கொண்டு அதே நேரத்தில் ஒற்றுமையின் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், நவராத்திரி பண்டிகை துர்க்கை அம்மனின் 9 விதமான பரிணாமங்களை, அம்சங்களை வழிபடுவதன் மூலம் கொண்டாடப்படுகிறது. மேலும் நவராத்திரியின் இறுதி நாள் கொண்டாட்டமான தசரா, தீமைக்கு எதிரான நல்லதொரு வெற்றியை குறிக்கிறது. அதாவது துர்க்கை அம்மன் தேவி அரக்கனை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்ததை குறிக்கிறது.
 
தேவியரை போற்றும் பண்டிகை
 
தென்னிந்திய மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு, நவராத்திரியின் கடைசி நாளான 9 வது நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை, சரஸ்வதி பூஜையானது முப்பெரும் தேவியரை போற்றும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மன், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவி மற்றும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவர். சரஸ்வதி தேவி அறிவு, இசை, கலை மற்றும் ஞானத்தின் தெய்வ ரூபமாக கருதப்படுகிறார். சரஸ்வதி தேவி, மும்மூர்த்திகளின் ஒரு பகுதியை முப்பெரும் தேவிகளை உருவாக்குகிறார். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், புத்திசாலியாகவும், அறிவாற்றலுடனும் விளங்க தெய்வத்தின் ஆசிகளை நாடுகின்றனர்.
 
மீனாட்சியம்மன் சுந்தரர் அலங்காரத்தில்..
 
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா 3 ஆம் தேதி தொடங்கி வரும் 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன்  பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். அதன்படி விழாவின் 5 ஆம் நாளில் கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியின் 2 ஆம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் சுந்தரர் அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  நவராத்திரியை முன்னிட்டு கோயிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.  நவராத்திரி உற்சவ விழாவையொட்டி சிவபெருமான் திருவிளையாடல்களை எடுத்துரைக்கும் வகையிலான அமைக்கப்பட்ட கொலு மண்டபத்தில் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன.
 
மனமுருக தரிசனம் 
 
நவராத்திரி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைக்கப்பட்ட கொலுமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்து சென்றனர். சுந்தரர் அவதாரத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்தனர்.
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanniyarasu Slams Aadhav Arjuna: ’’விஜய்தான் முக்கியமா! திருமாவை அவமதிக்காதே!'’ வன்னியரசு எச்சரிக்கைAllu Arjun son letter: ‘’அப்பா நீங்கதான் NO.1’’ மகன் எழுதிய CUTE LETTER! எமோஷனலான அல்லு அர்ஜுன்TANGEDCO Adani Tender: 19000 கோடி TANGEDCO டெண்டர்! தட்டி தூக்கிய அதானி! சிக்கலில் செந்தில்பாலாஜி?Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Embed widget