மேலும் அறிய

முத்தமிழ் முருகன் மாநாடு; ஒரு லட்சம் பேருக்கு உணவு... பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு.

பழனியில் வருகின்ற 24,25ம் தேதி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அருள்மிகு பழனி ஆண்டவர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட அரங்கங்கள், 8 இடங்களில் நுழைவாயில்கள், சாமிகளின் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முத்தமிழ் முருகன் மாநாடு; ஒரு லட்சம் பேருக்கு உணவு... பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வருகின்ற 24 மற்றும் 25ஆம் தேதி அருள்மிகு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் ஊன்றும் விழா கடந்த 3ஆம் தேதி துவங்கி பணிகள் நடைபெற்று வருகிறது.

முத்தமிழ் முருகன் மாநாடு; ஒரு லட்சம் பேருக்கு உணவு... பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

இந்நிகழ்ச்சியில் ஐந்து ஆய்வகங்கள், 1300 ஆய்வு கட்டுரைகள், இது தவிர 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர். மேலும் 4 நீதிஅரசர்கள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டின் விழா மலர் மற்றும் ஆய்வு கட்டுரை மலர் என இரண்டு மலர்களாக வெளியிடப்படவுள்ளது.

முத்தமிழ் முருகன் மாநாடு; ஒரு லட்சம் பேருக்கு உணவு... பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

3D வடிவில் முருகனை அருகில் இருந்து தரிசனம் செய்யும் வகையில் 100 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. முருகன் பெருமை விளக்கும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் முருகன் புகழை சொல்லும் கும்மியாட்டம், கந்த சஷ்டி கவசம் என காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பின்னர் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

முத்தமிழ் முருகன் மாநாடு; ஒரு லட்சம் பேருக்கு உணவு... பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

மேலும் மாநாட்டை முன்னிட்டு 8 இடங்களில் அலங்கார வரவேற்பு, தலைவர்கள் மாநாட்டுக்கு வரும் போது 8000 பக்தர்கள் அமைந்து பார்வையிடும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. மாநாட்டு கண்காட்சிக்கு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்பதால் சுகாதாரப் பணிகள் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்காகவும் தூய்மை பணியாளர்கள், பிரத்யேகமாக கூடிய மருத்துவ வாகனங்கள்,  தேவையான அளவு பேருந்துகளை இயக்கவும், வருகின்ற நபர்களுக்கு குடிநீர் இயற்கை உபாதையில் கட்டமைப்புகள் மாற்றுத்திறனாளிகள் அரங்கத்திற்கு சிரமம் இல்லாமல் வந்து செல்லும் வழியில் நான்கு சக்கர நாற்காலிகள், இரண்டு நாள் மாநாட்டில் 30 ஆயிரம் பேர் சாப்பிட வசதியாக ஆங்காங்கே ஸ்டால்கள் மற்றும் உணவு வழங்கிடவும் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முத்தமிழ் முருகன் மாநாடு; ஒரு லட்சம் பேருக்கு உணவு... பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள் மாணவ, மாணவிகளை பயன்படுத்திக் கொள்ளவும், கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என  450-க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு நாட்கள் சீருடை இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவுகள் ஏற்பாடு மற்றும் வருகை்தரும் அனைவருக்கும் பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி, லேமினேசன் செய்யபட்ட முருகன் போட்டோ வழங்க பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Breaking News LIVE: கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பாப்பா இடமாற்றம்!
Breaking News LIVE: கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பாப்பா இடமாற்றம்!
TNEA Counselling: 55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai School Students : அரசு நிகழ்ச்சில் சாமி பாடல்! சாமி ஆடிய மாணவிகள்!Vineeth Srinivasan on Nivin Pauly : சிக்கலில் நிவின் பாலி?ஆதாரத்தை வெளியிட்ட DIRECTOR! புது TWISTJammu Kashmir Cong.Manifesto : தள்ளி போய் விளையாடுங்க!காலரை தூக்கும் ராகுல்! காங்.வசமாகும் காஷ்மீர்!MahaVishnu Profile | நித்தியானந்தா 2.0?காமெடியன் To ஆன்மீகம்!யார் இந்த மகாவிஷ்ணு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Breaking News LIVE: கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பாப்பா இடமாற்றம்!
Breaking News LIVE: கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பாப்பா இடமாற்றம்!
TNEA Counselling: 55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
"உங்களுக்கு கடவுள் தந்த தண்டனை" வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் தோல்வி குறித்து பிரிஜ் பூஷன் பரபர!
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பிய விண்கலம்: பாதுகாப்பாக தரையிறங்கியதா?
சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பிய விண்கலம்: பாதுகாப்பாக தரையிறங்கியதா?
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? -  கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? - கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
Vinayagar Chaturthi: பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது? -  முழு வரலாறு இதோ
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது? - முழு வரலாறு இதோ
Embed widget