மேலும் அறிய
முருக பக்தர்கள் மாநாட்டில், அரசியல் இருக்காது என்று நம்பி போனோம் - மனம் திறக்கும் ஆர்.பி.உதயகுமார்
தந்தை பெரியார், அண்ணா ஆகியோருக்கு இழுக்கு என்றால் முதல் குரல் கொடுப்பது அதிமுகதான் - அடித்துச் சொல்லும் ஆர்.பி.உதயகுமார்.

முருக பக்தர்கள் மாநாடு
Source : whats app
தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா ஆகியோரை பற்றி தவறாக யார் பேசினாலும் அதை நெஞ்சுரத்துடன் எதிர்க்கும் ஒரே தலைவர் எடப்பாடியார் தான் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
முருக பக்தர்கள் மாநாடு என்று வம்புக்கு இழுத்து உள்ளார்கள்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது..,” மக்களுக்கு சேவை செய்தவதை விட, மக்களுக்கு பணி செய்வதை விட அ.தி.மு.க., மீது அவதூறுகளை சொல்வது தான் தி.மு.க., அதிக நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறது. ஆட்சி கைவிட்டு போய்விடும் என்ற அச்சத்தில் எல்லையை மீறி அவதூறுகளை பரப்பி வருகிறது. எந்த பிரச்னை என்றாலும் அதை மடைமாற்றம் செய்வதும், திசை திருப்பி விடுவதையும் தான் செய்து வருகிறார்கள். கீழடி பிரச்னையில் அவதூறு பரப்பினார்கள். இது குறித்து எடப்பாடியார் ஆட்சியில் பங்களிப்பு குறித்து ஆதாரங்களை வெளியிட்ட பிறகு, தற்போது முருக பக்தர்கள் மாநாடு என்று வம்புக்கு இழுத்து உள்ளார்கள்.
தமிழ்நாடு மக்களுக்கு நன்றாக தெரியும்
பேரறிஞர் அண்ணா சொன்னது போல ”மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு” - என்ற கூற்றின் படி முருக பக்தர்கள் அழைப்பு விடுத்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்று முருக பக்தர்கள் என்ற அடிப்படையில் கலந்து கொண்டோம். அதில் அரசியல் இல்லை, நீதிமன்றம் அதில் உறுதியாக தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் அரசியல் இருக்காது என்று, நம்பிக்கையோடு நாங்கள் கலந்து கொண்டோம். இதனை தொடர்ந்து தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா குறித்து அவதூறு வீடியோ பரப்பப்பட்டதாக செய்தி விவாதம் தற்போது வெளிவந்துள்ளது. நாங்கள் அதில் தெளிவாக கூறிவிட்டோம். ஒரு நாளும் கொள்கைகளை, கோட்பாடுகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம், என்பது தமிழ்நாடு மக்களுக்கு நன்றாக தெரியும்.
முதல் குரல் கொடுக்கும் இயக்கம் அதிமுக
நடைபெற்ற முருகன் மாநாட்டில் ஏற்படுத்திய தீர்மானத்திற்கும், உறுதிமொழிக்கும் அதிமுக சம்பந்தம் இல்லை, என்பதை தீர்க்கமாக கூறுகிறோம். அண்ணாவைப் பற்றி பெரியாரைப் பற்றி வீடியோ ஒளிபரப்பியது எங்களுக்கு தெரியாது. மேலும் முழு வீடியோ நாங்கள் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் பார்ப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு இல்லை. நாங்கள் மேடை ஒளிபரப்புக்கு செய்த பின்பு புறத்தில் தான் அமர்ந்து இருந்தோம். அந்த வீடியோ பாருங்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை. எது எப்படி இருந்தாலும் தந்தை பெரியார்,பேறிஞர் அண்ணா ஆகியோரை பற்றி தவறாக யார் பேசினாலும் அதை நெஞ்சுரத்துடன் எதிர்க்கும் ஒரே தலைவர் எடப்பாடியார் தான். தந்தை பெரியார், பேறிஞர்அண்ணா, புரட்சித் தலைவர், புரட்சிதலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் எங்களுக்கு மேடை நாகரிகம் கற்றுக் கொடுத்துள்ளார்கள், மேடை நாகரிகம் கருதி நாங்கள் இருந்தோம்.
அண்ணா பற்றி இழுக்கு என்றால் அதற்கு முதல் குரல் கொடுக்கும் இயக்கம் அதிமுக தான்” எனக் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















