முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு புதிய மேற்பார்வை குழு அமைப்பு
முல்லை பெரியாறு அணைப் பாதுகாப்பு தொடர்பான பணிகளை கவனிக்கும் பொறுப்பு தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு புதிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை மேற்பார்வை செய்ய 7 பேர் கொண்ட புதிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான நீர்த்தேவையை பூர்த்தி செய்வதில் பருவமழை காலங்களில் பெய்யும் மழை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கிய மழை பருவமான, தென் மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை வழியாகவே, நாடு முழுவதுக்கும் தேவைப்படும் நீரின் அளவு பெரும்பாலும் பூர்த்தியாகிறது. வேளாண்மை மற்றும் குடிநீர் போன்றவற்றுக்கு, நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள், பருவ மழையையே நம்பியுள்ளன. கேரள, கர்நாடக மாநிலங்கள் தமிழ்நாட்டை காட்டிலும் அதிகமாக பலன் பெற்றாலும், இந்த இரு மாநிலங்களிலும் பெய்யும் மழையானது ஆறுகள் வழியாக தமிழ்நாட்டை வந்தடைகின்றன.
இந்த நிலையில், தமிழக கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு மற்றும் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்தும் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், குறிப்பாக தேனி மாவட்டத்தின் விவசாயத்தின் உயிர்நாடியாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணை தமிழக கேரள எல்லை கேரள மாநிலம் குமுளி தேக்கடியில் உள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, மூன்று பேர் கொண்ட 'கண்காணிப்பு குழுவை" உச்சநீதிமன்றம் நியமித்தது. அதன் பின் உச்சநீதிமன்றம் கண்காணிப்பு குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது.
சட்டமன்றத்தேர்தல்தான்.... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஜகா வாங்கிய தவெக!
அணைப் பாதுகாப்பு சட்டத்தின்படி, புதிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய குழுவில் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளர், கேரள நீர்வளத்துறை கூடுதல் செயலாளர், காவிரி தொழில்நுட்பக்குழுவின் தலைவர், கேரள நீர்பாசனத்துறை தலைமைப் பொறியாளர், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி, தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக மத்திய நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே இருந்த 5 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு தொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த மேத்யூ நெடும்பாரா என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அணைப் பாதுகாப்பு - 2021 சட்டத்தின்படி முல்லைப் பெரியாறு அணைக்கு உரிய கண்காணிப்புக் குழு நியமிக்கப்படவில்லை என்று முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் உரிய குழுவை விரைவில் அமைப்பதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. அதன்படி, அணை பாதுகாப்புக்கு குழு அமைத்து மத்திய அரசு உத்தர பிறப்பித்து, அணைப் பாதுகாப்பு தொடர்பான பணிகளை கவனிக்கும் பொறுப்பு தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

