விஜய்க்கு அரசியல் தெரியாது! 2026 தேர்தலில் திமுகவின் மாஸ் வெற்றி உறுதி: அமைச்சர் ஐ. பெரியசாமி பரபரப்பு பேச்சு!
மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இந்தியாவிலே தலைவர் நம் முதல்வர்தான் எந்த விமர்சனங்களும் அவரை தொட்டுப் பார்க்க கூட முடியாது - ஐ.பெரியசாமி
2026 ஆம் ஆண்டு திமுக அமோக வெற்றி பெறும் இரண்டாவது இடத்தை தக்க வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார். மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு விஜய், சீமான் செல்வார்கள் என திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டியளித்தார்.
திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பேட்டியில், “திமுக கழகத்தின் தலைவர் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இந்தியாவிலே தலைவர் நம் முதல்வர் தான் எந்த விமர்சனங்களும் அவரை தொட்டுப் பார்க்க கூட முடியாது. காரணம், தன்னுடைய கடந்த நான்காண்டு காலத்தின் எல்லா மக்களுக்கும் அடித்தட்டடில் இருக்கிற மக்கள் நடுத்தர மக்கள் மாற்றுக் கட்சி மக்கள் வணிகர்கள் வியாபாரிகள் தொழில் செய்யக்கூடியவர்கள் அத்தனை பேருக்கும் எண்ணற்ற திட்டங்களை தந்து தொழில் துறையில் மட்டும் அல்ல எல்லா துறையிலும் இன்றைக்கு தமிழகம் முதல் மாநிலமாக விளங்கியது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். எடப்பாடி அரசு வர வேண்டும் என்று முயற்சி செய்கிறார். மூன்றாவது இடம் நான்காவது இடத்திற்கு தான் முயற்சி செய்கிறார். இவர்கள் ஒரு இடத்தை கூட தமிழ்நாட்டில் பிடிக்க முடியாது. இவர்கள் விமர்சனம் மக்களுடைய மனதில் நிற்காது ஆனால் நம்முடைய மக்களின் மனதில் நம்முடைய தளபதி இருக்கிறார்.
எந்த கட்சியும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 20,000, 25,000 ஓட்டுக்களை தாண்ட மாட்டார்கள். திமுக லட்சக்கணக்கான ஓட்டுகளில் வெற்றி பெறும். விஜய் பற்றி எங்களுக்கு கவலை இல்லை . அவரைப் பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை. பயப்படவும் இல்லை. சினிமாவை பார்த்துவிட்டு சென்றவர்கள் விஜயை மறந்து விடுவார்கள். அதே போல் தான் பிரச்சாரத்திலும் மறந்து விடுவார்கள். மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். வெள்ளை அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளோம் . மகளிர் உரிமைத் தொகை மற்றும் பெண்கள் பேருந்தில் பயணம் சொல்வது எளிது செய்வது அரிது சொன்னதையும் சொல்லாததையும் செய்த முதல்வர் தமிழக முதல்வர்.
யாரோ சொல்லி கட்சி ஆரம்பித்துள்ளார். அவரைப் பார்ப்பதற்கு கூட்டம் வருவது வழக்கம். 1977 கம்யூனிஸ்ட் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்து விலகிச் சென்றனர். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவிலிருந்து விலகிச் சென்றதால் அதிமுக வெற்றி பெற்றது. எம்ஜிஆர் முதல்வரான திமுகவில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்திருந்தால் எம்ஜிஆர் வெற்றி இருக்க மாட்டார்.
விஜய்க்கு அரசியல் அடிச்சுவடி தெரியாது. பார்ப்பதற்கு வருபவர்கள் ஓட்டு போட மாட்டார்கள். ஓட்டாக மாறாது . 2026 தேர்தலில் திமுகவினர் திமுக உறுப்பினர்கள் டீயை கூட குடிக்காமல் தொண்டன் வேலை பார்ப்பார். 2026 இல் மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தொடர்ந்து கலெக்டர் கூட அந்த அளவுக்கு பணி செய்ய மாட்டார். அந்த அளவுக்கு தினம் தோறும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று முதல்வர் மக்களுக்கான பணியை செய்து வருகிறார் கலைஞரே உழைப்பு உழைப்பு என்று சொன்ன அந்த உழைப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை பார்த்து தான் சொல்லி இருப்பாரோ முதல்வர் தொடர்ந்து பணி செய்து வருகிறார். தேர்தல் களத்தில் நாங்கள் ஆற்றுகின்ற பணி இதுவரை திமுக தொண்டர்களே பார்க்காத அளவிற்கு மிக சிறந்த பணியாக இருக்கும் 2026 ஆம் ஆண்டு திமுக மிகப்பெரிய வெற்றியை 200 க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம். திண்டுக்கல்ளில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்றார்.





















