தமிழகத்தில் பொதுமக்களிடமிருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது - அமைச்சர் இ.பெரியசாமி
மக்களாட்சி எப்பொழுதும் தமிழ்நாட்டில் இருக்கும். மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால் நான் திட்டவட்டமாக சொல்லுகிறேன் பொதுமக்களிடம் இருந்து அதிமுக விலகிப் போய்விட்டது.
தமிழகத்தில் பொதுமக்களிடமிருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும்., உள்ளாட்சித் தேர்தல் பற்றி தேர்தல் ஆணையமும் முதல்வரும் முடிவு செய்வார் என ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் புது பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி பேட்டியளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மூன்று கோடியே 69 லட்சத்து 82,000 ஆயிரம் மதிப்பீட்டில் பொன்மாந்துரை ஊராட்சிக்கு உட்பட்ட குட்டியபட்டி, அனுமந்துராயன் கோட்டை, மேலப்பட்டி, அலவாச்சிபட்டி, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி,கரிசல் பட்டி, குயவநாயக்கன்பட்டி, ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடம், பொது விநியோகக் கடை கட்டிடம் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை மற்றும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ஆகியவற்றை தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது, உள்ளாட்சி தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தேர்தலை பொறுத்தவரையில் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் எப்பொழுது தேர்தல் நடத்தலாம் என்று சொல்லுகிறார்களோ அப்போது தமிழக முதலமைச்சர் முடிவு செய்வார். மக்களாட்சி எப்பொழுதும் தமிழ்நாட்டில் இருக்கும், மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால் நான் திட்டவட்டமாக சொல்லுகிறேன் பொதுமக்களிடம் இருந்து அதிமுக விலகிப் போய்விட்டது.
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
இன்னும் பத்தாண்டு காலத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் இருக்கும். ஒரு மாவட்டத்தில் நடக்கும் விபத்துகளோ அல்லது முக்கியமான சம்பவம் நடந்தாலும் அதற்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடு மாநிலம் அமைதி பூங்காவாக இருக்கிறது. அதற்கு உதாரணமாக வெளிநாடுகளில் இருந்து தொழிற்சாலைகள் துவங்குவதற்கு அதிகமான முதலீடுகளை தமிழ்நாட்டில் தான் முதலீடு செய்கிறார்கள். ஏற்கனவே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் கொண்டு வந்து விடுவேன் என்று முதல்வர் கூறியிருந்தார்.
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
அதை நோக்கி தமிழக முதல்வர் சென்று கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு சம்பவத்தை வைத்து தமிழ்நாட்டில் மொத்த உலக சீர்கெட்டு விட்டது என்று சொல்ல முடியாது. தமிழ்நாடு அமைதி பூங்காவாகத்தான் இருக்கிறது. யாரு தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.