மேலும் அறிய

பழனி முருகன் கோயிலில் 200 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் விற்பனை - அமைச்சர் சக்கரபானி துவக்கி வைப்பு

தமிழகத்தில் அரசு சார்பில் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்ந்தால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்த பிரசாதத்தை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரை கிலோ எடை கொண்ட பஞ்சாமிர்தம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பக்தர்கள் வசதிக்காக புதிதாக 200 கிராம் அளவில் 20 ரூபாய்க்கு பஞ்சாமிர்தம் விற்பனையை துவங்கியுள்ளது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பஞ்சாமிர்த விற்பனையை துவக்கி வைத்தார்.

பழனி முருகன் கோயிலில் 200 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் விற்பனை -  அமைச்சர் சக்கரபானி துவக்கி வைப்பு

மேலும் பக்தர்கள் வசதிக்காக படிப்பாதையில் 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதல் உதவி மைய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பழனி கோயில் சார்பில் துவங்கப்பட உள்ள மனநல காப்பகத்தையும் உணவுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி,  மத்திய அரசு மலிவு விலையில் அரிசி விநியோகத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது பற்றி கேட்டதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் முதலமைச்சர் கலைஞர் ரேஷன் கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு அரிசி விநியோகம் செய்யும் திட்டத்தை கொண்டுவந்தார்.  தற்போது விலை இல்லாமல் ரேஷன் கடைகளில் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பழனி முருகன் கோயிலில் 200 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் விற்பனை -  அமைச்சர் சக்கரபானி துவக்கி வைப்பு

மேலும் கடந்த காலத்தில் தமிழகத்தில் 370 அரிசி ஆலைகள் இயங்கி வந்தது, தற்போது 700 அரிசி ஆலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு மாதத்திற்கு 6 லட்சம் மெட்ரிக் டன் அரிசி அரைக்கக் கூடிய வகையில் இருந்தது தற்போது மாதத்திற்கு 12 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு அரிசி அரைக்கக்கூடிய வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரிசி அரைக்கக் கூடிய ஆலைகளிலும் கருப்பு பழுப்பு நீக்கக்கூடிய வகையில் நவீன இயந்திரம் 50 லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக தரமான அரிசி உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர்,தேனி உள்ளிட்ட இடங்களில் அரசு தனியாருடன் இணைந்து  அரிசி அரைக்க கூடிய ஆலைகள் துவங்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்த உடன் அரசு சார்பில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். அரிசி பற்றாக்குறையை தவிர்க்க 10 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் முப்பத்து ஐந்து ரூபாய் நாற்பது பைசாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயிலில் 200 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் விற்பனை -  அமைச்சர் சக்கரபானி துவக்கி வைப்பு

ஆட்சி பொறுப்பேற்று 32 மாதங்களாக தரமான அரிசி ரேஷன் கடைகள் மூலம்  வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு நெல்மணி கூட வீணடிக்கப்படாத சூழல் உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டத்தின் பேரில் நான் லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு இருப்பு வைக்கக்கூடிய வகையில் 400 கோடி ரூபாய் செலவில் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மழைக்காலத்தில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி வீணானது தற்போது ஒரு நெல்மணி கூட வீணடிக்கப்படாத சூழலை அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளதாகவும்,

உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் அவர்கள் உணவுத்துறை அமைச்சர் ஆன தனது தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் எந்த உணவுப் பொருள் விலை உயர்ந்தாலும் அவற்றை வாங்கி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரிசி விலை உயர்ந்தால் அதை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.  ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என விஜய் அரசியல் வருகை குறித்து அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். நடிகர்  விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் இதனால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Fengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்”தூங்குறவர வெட்டிட்டாங்க! 7 வயசுல குழந்தை இருக்கு” கதறி அழும் மனைவிஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Embed widget