தேனி: மஞ்சளாறு அணை முழு கொள்ளளவை எட்டியது - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பெரியகுளம் மஞ்சளார் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழையின் எதிரொலியால் பெரியகுளம் மஞ்சளார் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மஞ்சளாறு அணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையின் காரணமாக கடந்த மாதம் ஒன்றாம் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத நிலையில் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் காணப்பட்டது.
இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இதனிடையே கடந்த மூன்று நாட்களாக அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து சிறிது சிறிதாக அதிகரித்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து 664 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Tamil Compulsory: இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு
எனவே அணை ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை எட்டி இருந்த நிலையில் தற்போது அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் நேராக அப்படியே மஞ்சளார் ஆற்றில் திறந்து விட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மஞ்சளார் ஆற்றின் ஆற்றங்கரையோர பகுதிகளான தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, G. கல்லுப்பட்டி, தும்மளப்பட்டி, வத்தலகுண்டு, விருவீடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆற்றை கடக்கவோ குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் தற்பொழுது 55 அடி நீர் உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து 644 கனடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 644 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்