மேலும் அறிய

தமிழகத்திலிருந்து தோட்ட வேலைக்கு சென்றவரை கேரள மாநிலத்தவர் தாக்கிய விவகாரம் - ஒருவர் கைது

தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் சேத்துக்குழி பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்துக்கு வேலையாட்களை இறக்கி விட சென்றவரை சிலர் சரமாரியாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ . இதுதொடர்பாக ஒருவர் கைது

தமிழக கேரள எல்லை மாவட்டமானது தேனி மாவட்டம். இந்த மாவட்டத்திலிருந்து தினந்தோறும் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் கேரள மாநிலத்திற்கு வேலைக்காக சென்று திரும்புகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் குறிப்பாக தேயிலை தோட்டங்களுக்கு வேலைகளுக்கு தமிழகத்திலிருந்தே வேலையாட்கள் சென்று திரும்புகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து தோட்ட வேலைக்கு பணியாட்களை ஏற்றச் சென்ற ஜீப் ஓட்டுனரை  கேரளத்தை சேர்ந்த சிலர் குடிபோதையில் தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

EPS Statement: ”இனியாவது நல்லது செய்யுங்க; தேவையில்லாமல் அதிமுகவை சீண்ட வேண்டாம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்திலிருந்து தோட்ட வேலைக்கு சென்றவரை  கேரள மாநிலத்தவர் தாக்கிய விவகாரம் - ஒருவர் கைது

இதனை தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் குறிப்பாக தேனி மாவட்ட மக்களிடையே மிகுந்த கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியது. அதனை தொடர்ந்து நேற்று கேரளாவில் வேலைக்கு சென்ற தொழிலாளரை தாக்கிய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்துக்களுக்கே பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லை: நாடாளுமன்றத்தில் திருமா சொன்ன காரணம்!

தேனி மாவட்டம் கம்பம் சவுடம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (45). ஜீப் டிரைவரான இவர், கடந்த 5-ந்தேதி தனது ஜீப்பில் பெண் தோட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் சேத்துக்குழி பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்துக்கு வேலையாட்களை இறக்கி விட சென்றார். பின்னர் பணிகளை முடித்துவிட்டு மாலை கம்பம் நோக்கி புறப்பட்டார்.

தமிழகத்திலிருந்து தோட்ட வேலைக்கு சென்றவரை  கேரள மாநிலத்தவர் தாக்கிய விவகாரம் - ஒருவர் கைது

கேரள மாநிலம் கம்பம்மெட்டு அருகே கருணாபுரம் பகுதியில் ஜீப் வந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த சாலி, வினோத், பிஜோ தாமஸ், மந்திப்பாறையை சேர்ந்த ஜின்ஸ் ஆகியோர் ஜீப்பை வழிமறித்து, சதீஷ்குமாரிடம் தகராறு செய்ததுடன் அவரை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில் கேரள மாநிலம் கம்பம்மெட்டு போலீசார் விசாரணை நடத்தி, ஜீப்  ஓட்டுநரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சாலி, வினோத், பிஜோ தாமஸ் ஆகிய 3 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் தமிழக,கேரள எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

இதற்கிடையே சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், கேரள போலீசார் முறையாக வழக்குப்பதிவு செய்யவில்லை என தேனி மாவட்ட போலீசாரிடம் தமிழக ஜீப் டிரைவர்கள், தோட்ட தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேனி மாவட்ட போலீசார், கேரள மாநில போலீசாரிடம் பேசினர்.

தமிழகத்திலிருந்து தோட்ட வேலைக்கு சென்றவரை  கேரள மாநிலத்தவர் தாக்கிய விவகாரம் - ஒருவர் கைது

அதன்பேரில் கேரள போலீசார், ஜீப்  ஓட்டுநர் சதீஷ்குமார் கொடுத்த புகார் மனு மற்றும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடிப்படையில் நேற்று வழக்கை திருத்தம் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஜின்ஸ் (34) என்பவரை கைது செய்தனர். மேலும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சாலி, வினோத், பிஜோ தாமஸ் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.கேரளாவிற்கு வேலைக்காக சென்றவர் மீது கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதால் கடந்த ஒரு சில தினங்களாக தேனி மாவட்டத்தில் இரு  மாநிலத்தவரிடையே பரபரப்பு எற்பட்டது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
Breaking News LIVE: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar cases : ”சவுக்கு பரபரப்பு வாக்குமூலம் கையை உடைத்தது உண்மை”வழக்கறிஞர் அதிர்ச்சி தகவல்KPK Jayakumar Death : காங். ஜெயக்குமார் மரணம்தோட்டத்தில் கைப்பற்றிய கேன்? வலுக்கும் சந்தேகங்கள்Salem Gold Thattu Vadai Set : வாவ் என்ன ருசி என்ன ருசிதங்கத்தில் தட்டுவடை? சேலத்தில் குவியும் மக்கள்Savukku Shankar cases : ”கஞ்சா வழக்கு பொய்! ஆவணங்கள் எங்கட்ட இருக்கு” சவுக்கு வழக்கறிஞர் ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
Breaking News LIVE: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024: 497 மதிப்பெண்கள்... 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம்... 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மயிலாடுதுறை
497 மதிப்பெண்கள்... 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம்... 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மயிலாடுதுறை
ஒரே பெயரில் அதிக மின் இணைப்பு வச்சிருக்கீங்களா? அரசின் அதிரடி முடிவு- வலுக்கும் கண்டனம்!
ஒரே பெயரில் அதிக மின் இணைப்பு வச்சிருக்கீங்களா? அரசின் அதிரடி முடிவு- வலுக்கும் கண்டனம்!
10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பில் 75,521 பேர் தோல்வி: துணைத்தேர்வுக்கு நாளையே விண்ணப்பிங்க! விபரம் இதோ!
10ஆம் வகுப்பில் 75,521 பேர் தோல்வி: துணைத்தேர்வுக்கு நாளையே விண்ணப்பிங்க! விபரம் இதோ!
TN 10th Result Centums:கணிதத்தில் கலக்கிய மாணவர்கள் - எவ்வளவு பேர் எந்த பாடத்தில் சதம்? பாடவாரியாக லிஸ்ட் இதோ!
கணிதத்தில் கலக்கிய மாணவர்கள் - எவ்வளவு பேர் எந்த பாடத்தில் சதம்? பாடவாரியாக லிஸ்ட் இதோ!
Embed widget