மகா சிவராத்திரி.. ரஜினி கோயிலில் சிறப்பு அபிஷேகம்
மகா சிவராத்திரி முன்னிட்டு திருமங்கலத்தில் உள்ள ரஜினி கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு 101 வடமாலை அணிவித்து குடும்பத்துடன் வழிபாடு.

மகா சிவராத்திரி முன்னிட்டு திருமங்கலத்தில் உள்ள ரஜினி கோயிலில் சிவன் உருவத்தில் உள்ள ரஜினியின் புகைப்படத்திற்கு 6 வீத வாசனை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடத்தி 101 வடை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
மகா சிவராத்திரி - Maha Shivratri 2025
மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை வழிபடுவதும், சிவலிங்கத்திற்கு பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்வதும் ஒரு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானின் ஆசியை பெற பக்தர்கள் கடுமையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழிந்து, சிவனுக்கு மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை பாராயணம் செய்வர். ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைப்பர். இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் சிவபெருமானுக்குரிய ஒரு விரதம் தான் மகா சிவராத்திரி. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் மகா சிவராத்திரி வரும். மற்ற அனைத்து சிவராத்திரிகளை விடவும், இந்த சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் நடிகர் ரஜிக்கு மதுரையில் தனிநபருக்கு சொந்தமான கோயில் உள்ளது. இந்த சூழலில் ரஜினி கோயிலில் சிவன் உருவத்தில் உள்ள ரஜினியின் புகைப்படத்திற்கு 6 வீத வாசனை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடத்தி 101 வடை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.






















