மேலும் அறிய
Maha Shivratri 2025: ஒச்சாண்டம்மனுக்கு.. மாசிப் பெட்டி கொண்டு செல்லும் காட்சி காண கண்கோடி வேண்டுமே !
பூசாரிகள் ஆணி செருப்பில் நடந்து வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்கள். இந்த காட்சியை காண உசிலம்பட்டியின் நகர் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

மாசிப் பெட்டி திருவிழா
Source : whats app
உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலின் மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மாசி பெட்டி உசிலம்பட்டியிலிருந்து பாப்பாபட்டியில் உள்ள கோயிலுக்கு பக்தர்களின் ஆரவாரத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
மகா சிவராத்திரி - சிறு தெய்வ வழிபாடு
மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை வழிபடுவதும், சிவலிங்கத்திற்கு பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்வதும் ஒரு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானின் ஆசியை பெற பக்தர்கள் கடுமையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழிந்து, சிவனுக்கு மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை பாராயணம் செய்வர். ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைப்பர். இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் சிவபெருமானுக்குரிய ஒரு விரதம் தான் மகா சிவராத்திரி. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் மகா சிவராத்திரி வரும். மற்ற அனைத்து சிவராத்திரிகளை விடவும், இந்த சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதே போல் இன்று பல்வேறு குலதெய்வ கோயில்களிலும் சிறப்பு வழிபாடு செய்யப்படும். அந்த வகையில் உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலின் மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மாசி பெட்டி உசிலம்பட்டியிலிருந்து பாப்பாபட்டியில் உள்ள கோயிலுக்கு பக்தர்களின் ஆரவாரத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
மாசிப் பெட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலில் மாசி சிவராத்திரி திருவிழா இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஒச்சாண்டம்மன் ஆபரணங்கள் அடங்கிய புகழ்பெற்ற மாசி பெட்டி உசிலம்பட்டி சின்னக்கருப்ப சாமி கோயிலிலிருந்து பாப்பாபட்டி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆபரணங்கள் அடங்கிய இந்த மாசிப் பெட்டிகளை பூசாரிகள் கோடாங்கிகள் மேலதாளங்கள் முழங்க உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வந்து அன்னம்பாரிபட்டி, வடகாட்டுப்பட்டி, மேக்கிலார்பட்டி, கீரிப்பட்டி வழியாக பாப்பாபட்டிக்கு எடுத்து செல்கின்றனர்.
பூசாரிகள் ஆணி செருப்பில்
மாசிப் பெட்டி செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு இன்று இரவு பெட்டிகள் சென்றடையும் சூழலில் இரவு சிவராத்திரி பூஜையை முடித்துவிட்டு நாளை மறுநாள் மீண்டும் உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்படும். உசிலம்பட்டிக்கு வரும் போது பூசாரிகள் ஆணி செருப்பில் நடந்து வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்கள். இந்த காட்சியை காண உசிலம்பட்டியின் நகர் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Maha Shivratri 2025 : தவக்கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான்..! வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கோவிலின் சிறப்புகள் தெரியுமா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை குப்பை மாநகரம் போல் மாறிவிட்டது - நீதிபதி நேற்று வேதனை... இன்று உடனே அகற்றப்பட்ட குப்பைகள்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion